சுயநம்பிக்கை
* ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுவதையும், வெறுப்பதையும் விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் பூஜிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
* மனதுக்கு பிடித்த வேலையை செய்ய மூடனாலும் முடியும், எந்த வேலையையும் தன் மனதுக்குப் பிடித்ததாகச் செய்பவன் அறிவாளி.
* பிறர் நலனுக்காகச் சிறிது பணி செய்தாலும் உனக்குள் உள்ள சக்தி விழித்துக் கொள்ளும். பிறருக்காக சிறிது சிந்தித்தாலும், உன் உள்ளத்தில் சிங்கத்தின் பலம் வந்து சேரும்.
* பணத்தால் எதுவும் ஆவதில்லை, பெயரால், புகழால், கல்வியால் எதுவும் ஆவதில்லை, அன்பால் அனைத்தும் நிறைவேறும்.
* எவரையும் "நீ கெட்டவன்' என்று சொல்லாதே, "நீ நல்லவன் தான், இன்னும் நல்லவனாக ஆகு' என்று தான் கூற வேண்டும்.
* உன்னை நீயே வெறுக்காமலிருப்பது தான் முதற் கடமையாகும். முன்னேற்றமடைய முதலில் சுயநம்பிக்கை அவசியம் தேவை
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
ஒவ்வொரு உயிரிலும் கடவுள்
*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.
* ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.
* உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்.
* தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை
செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை
மன உறுதியுடன் இருங்கள்
* ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.
* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதி யுடன் இருங்கள்.
உண்மையான மகிழ்ச்சி
* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக
நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.
* அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை
மகிழ்விக்க முடியாது.
* கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது
செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.
* மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை
தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.
* கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம்
அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி
சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.
உன்னைப் பற்றியே சிந்திக்காதே!
* சமநிலையில் இருந்து பிறழாதவன், மன சாந்தமுடையவன், இரக்கமும், கருணையும் கொண்டவன் ஆகியோர் நல்ல
பணிகளை மட்டும் வாழ்வில் செய்ய
முற்படுவர். அதன்மூலம் அவன் தனக்கே நன்மையைத் தேடிக் கொள்கிறான்.
* தீமையைச் செய்வதால், நமக்கு நாமே
தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதால் நமக்கு நாமே நன்மை தேடிக் கொண்டவர்களாகிறோம்.
* சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் தெரிந்து
கொள்வதால் என்ன நன்மை விளையப்போகிறது!
நல்லவர்களாக வாழுங்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்வைப் பயனுடையதாக்குங்கள்.
* சுயநல எண்ணம் சிறிதும் இல்லாமல், பணம், புகழ்
என்னும் எதிர்பார்ப்பு வைக்காமல் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒருவன் தொண்டு செய்தால், உலகத்தையே மாற்றி அமைக்கும் சக்தி
அவனிடமிருந்து வெளிப்படும்.
* நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருப்பது
சுயநலங்களிலேயே மிகப்பெரிய பாவமாகும். சுயநலஎண்ணம் எவ்வளவு குறைகிறதோ அந்த அளவுக்கு
மதத்தின் ரகசியம்
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும். உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு
ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* உடலையும் புலன்களையும் வழிநடத்தும் போது, மனம் என்ற கடிவாளத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* சிறு சிறு ஆசைகளை அனுபவித்துத்தீர்க்க வேண்டும். பெரிய ஆசைகள் அனைத்தையும் விவேகத்தால் ஆராய்ந்து விட்டுவிட வேண்டும்.
* இல்லறத்தில் வாழ்ந்தபடியே காமத்தையும், பணத்தாசையையும் துறந்தவர்கள் பாக்கியசாலிகள்.
* மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை. செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது தான் மதத்தின் முழுப்பரிமாணமாகும்.
* ஒருவன் தன்னை வெறுக்கத் துவங்கிவிட்டால், அவன் கீழ்நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள்.
* எந்த வேலையாக இருந்தாலும், அதனைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி. எந்த வேலையும் அற்பமானதல்ல
விருப்பங்கள் நிறைவேறும்
* அனைத்திலும் இறைவனை காண்பது
நம்முடைய லட்சியமாகும். அனைத்திலும் காண முடியாவிட்டால், நாம் நேசிக்கும்
ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* வாழும் காலம் எவ்வளவு
வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், லட்சியத்தை அடைவதே நம்முடைய
உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
* இயற்கையின் ரகசியத்தை அறியும் போது மனிதன் இயற்கையின் உதவியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்வதுடன் மரணத்தையும்
வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை
அனுபவிக்கிறான்.
* நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம்
மாறுவதுடன், குரலும், தோற்றமும் மாறுகிறது.
அப்போது நீங்கள், மனித குலத்திற்கு ஒரு
வரப்பிரசாதமாக மாறிவிடுவீர்கள்.
* பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. பக்தியுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
அன்புதான் வாழ்க்கை
* நாம் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை, பிறருக்கு உதவிபுரிவதும் உலகிற்கு நன்மை செய்வதும் தான்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதும் அன்பு செலுத்துவதுமே வாழ்க்கை. அதுவே வாழ்க்கை நியதி.
* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப் படுகின்றன.
* கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப் படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணம்ஆகாமல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
* அனைத்து தேவைகளையும், துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
அன்பு தான் வாழ்க்கை
உன் உடலில் விழுந்த ஒரு துளி மையைப் பற்றி கவலைப்படாதே! இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி
எழுந்திரு, இது போன்ற ஆயிரம் துளிகள் இருப்பினும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.
* நமக்கு நாமே நன்மை செய்து மோட்சத்தை அடைவதைவிட மற்றவர்களுக்கு நன்மை செய்து,
ஆயிரம் நரகங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை.
* "சமயம்' என்ற பெரிய கறவை மாடு பல முறை உதைத்திருக்கலாம். ஆனால் அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். காரணம் கறவை மாடு அதிகம் பால் தருகிறது. இதனால் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.
* துணிந்து செயல்படுங்கள். எதையும் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பாட்டில் இறங்குங்கள்.
"முடியாது' என்ற வார்த்தையை அகராதியை விட்டு அகற்றுங்கள்
* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.
* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.
* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.
* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம். நமக்குத் தேவையான மூன்று
*உன் உடலில் ஏற்பட்டுள்ள கறையைப் பற்றிக் கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்தால், அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
*உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை.
*நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். அதனால், புனிதமும் பூரணத்துவமும் உங்களிடம் நிறைந்திருக்கிறது.
* அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.
* ஒட்டகம் முள் செடியைச் சாப்பிடும் போது வாயிலிருந்து ரத்தம் சொட்டும், இருந்தாலும் தின்பதை நிறுத்துவதில்லை. அதுபோல உலகத்தார் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானாலும் உலகப்பற்றை அவர்கள் விடுவதில்லை.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.
இரண்டுக்கும் வாழ்த்து கூறு!
நாள் கணக்கில் சிந்தியுங்கள்பாமரனைப் பண்புள்ளவனாகவும்,
பண்புள்ளவனைத் தெய்வமாகவும்
உயர்த்தும் கருத்தே மதம்.
* உற்சாகத்துடன் இருக்கத் துவங்குவது தான், நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்
பதற்கான முதல் அறிகுறி.
*நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத்
தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும்
தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல்
வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை
அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.
*அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
*கடவுள் விருப்பு வெறுப்பற்றவர். உலகம், உயிர்கள், அண்ட சராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.
இறைவனை மட்டுமே சார்ந்திரு!
மனிதத் துணை அனைத்தையும் விட இறைவன் எல்லையற்ற பெருமையை உடையவனாகிறான். இறைவனிடம்
நம்பிக்கை கொள். அவரையே எப்போதும் சார்ந்திரு; அப்போது நன்னெறியில் செல்வாய். எதனாலும் உன்னை வெல்ல முடியாது.
* இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்கள் அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
* பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரே விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால், பொருளாதாரப் பிரச்னையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.
* ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்விற்கும் உதவ வேண்டும். மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும். அதே வேளையில், இறப்பையும் ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.
* மதத்தைப் பற்றிக் கொண்டு சண்டையில் இறங்காதே, மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும். அறிவும் வெளியேறி இதயம் வறளும் போது தான் சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னால் அல்ல.
* அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில்
எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே
நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த
மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த
மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ,
அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து
நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை
உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள்,
நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.எது செய்தாலும் பலன் நமக்கே!
* உனக்குள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளியே காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், உன்னைச் சுற்றியுள்ள எல்லாம்
இசைவாக ஒழுங்குபடுத்தப்படும்.
* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும்
உன்னிடம் இருக்கும் வரை அனைத்தும் முன்னேற்றமடையும்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும்
வழிபடுங்கள்.
* ஆசைக்கும் கோபத்திற்கும் அடிமையாய் இருந்தால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை ஒருவனால் உய்த்துணர முடியாது.
* எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும்
இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு
செல்லும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு, சுயநலமின்மையே
நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம்
கொடுக்கக்கூடிய ஒரே இலக்கணம்.
* உங்களுடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுங்கள்,
நமக்குத் தேவை, இரும்பைப் போன்ற தசைகளும், எஃகைப் போன்ற நரம்புகளும் தாம். காலமெல்லாம் அழுதுகொண்டிருந்தது போதும், இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற
மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்
வலிமை பற்றி சிந்தியுங்கள்
* பொறாமையும், ஒன்று கூடி உழைக்க
இயலாமையும் அடிமைகளின் இயல்புகள். அவற்றை உதறியெறிய வேண்டும்.
* பரபரப்பு தேவையில்லை, சுறுசுறுப்பு
எப்போதும் உன்னிடம் இருக்கட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.
* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன், தூய்மையான மனத்தைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கையும் கொள்ள வேண்டும். அவனையே
எப்போதும் சார்ந்து, நன்னெறியில் நின்றால் எதனாலும் உன்னை வெல்ல முடியாது.
* கொடுப்பதற்காக கையை இறைவன் படைத்தள்ளான். பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடம் உள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் வழங்க
வேண்டும். அவ்வாறு பிறருக்கு வழங்குவதால்,
நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் மாற முடியும்.
* தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும்
வெற்றியளிப்பது உறுதி, இவ்விரண்டையும்
படைக்கலனாகக் கொள்ளும் எவரும் எத்தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவதும் உறுதி.
கொடுப்பவனாக வாழுங்கள்
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே, நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்திலுள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுத்துவிடு, அவ்வாறு பிறருக்கு கொடுப்பதாலேயே நீ பூரணமடைவாய், தெய்வமாகவும் ஆவாய்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், புறத்தேயுள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அதன் பின் அவனுக்கு அடிமைத்தனம் எதுவுமில்லை. அவன் மனம் விடுதலை பெற்று விட்டது. அத்தகைய நிலைமை அடைந்தவனே உலகத்தில் நன்றாக வாழக் கூடிய தகுதி பெற்றவனாவான்.
* அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. இவ்வாறு உலகில் எப்போதும் கொடுப்பவனாக நிற்க வேண்டும். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்கக் கூடாது, இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று நமது ஈகைக் குணத்தால் நாமும் கொடுப்போம்.
* தூய்மையான மனதைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனை
சார்ந்து நிற்க முனைவதுடன் நன்னெறியில் நிற்க வேண்டும்.
உயர உயர சோதனையும் வரும்
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள் ஆகியவை அனைவருக்கும்தேவை.
* உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், உண்மையில் பிடிப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பவர்கள் வெற்றி பெறுவது உறுதி.
* ஒவ்வொரு ஆன்மாவிலும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது, அதை வெளிக்கொண்டு வருவதே நம்
வாழ்க்கையின் லட்சியம். இதற்காக புறவாழ்க்கையிலும், அகவாழ்க்கையிலும் கட்டுப்பாட்டுடன் நடக்க
வேண்டும்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
* மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய். மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் ஆண்டவனுக்கு நீ தொண்டு செய்தவனாகிறாய்.
தவறுகளையும் வாழ்த்துங்கள்
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள்.
* மகத்தான செயல்களைச் செய்யவே இறைவன் நம்மைத் தேர்வு செய்கிறான். அவற்றைச் செய்து முடிப்போம் என்று உறுதியெடுங்கள்.
* பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப்பிரசாரமும், தத்துவபோதனையும் செய்வது அவர்களை அவமதிப்பதாகும்.
* மிருக, மனித, தெய்வீக இயல்புகளால் மனிதன் உருவாக்கப்பட்டிருக்கிறான். உன்னிடமுள்ள தெய்வீகத் தன்மையை வளர்க்கக்கூடியது தான் நல்லொழுக்கம். மிருக இயல்பை அதிகரிக்கச் செய்வது தீய ஒழுக்கம்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து, அந்தத் தவறுகள் நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
* வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும், அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். அந்தக் குணங்கள் தாம், அவர் வாழ்க்கையில் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணங்களாகும்.
உழைக்கும் கைகள் வேண்டும்
* கடவுள் பிரம்மாண்டமான வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதி எங்கும் கிடையாது. ஆனால், அந்த வட்டத்தின் மையம் அனைத்து இடங்களிலும் உள்ளது.
* எதையும் பரபரப்புடன் செயல்படுத்தக் கூடாது, மாறாக தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இம்மூன்றும் வெற்றிக்கு தேவை.
* நீ ஏற்கனவே தீர்க்கதரிசியாகத் தான் இருக்கிறாய். ஆனால், அதை அறியாமல் இருக்கிறாய். இதை நீ உணர வேண்டும்.
* ஆன்மிக வாழ்க்கைக்கோ, மனதுக்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கால்விரலால் கூட தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாக புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கை.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் நமக்குத் தேவை.
* எல்லாப் பேய்களும் நம் மனதில் தான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கியிருந்தால், எந்த இடத்தில் நாம் இருந்தாலும், எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும்.மனதில் உறுதியுடன் போராடு
சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது.
* இறைவன் ஒருவனே கொடுப்பவன். அவன் தரும் காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதனை பணமாக்கிக் கொள்ளலாம்.
* நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை.
* மனிதர்கள் தீமையைக் கண்டு மனம் கலங்கக்கூடாது. உள்ள உறுதியுடன் எதிர்த்துப் போராடவேண்டும்.
அதேபோல, நன்மை கிடைத்துவிட்டதே என தலைகால் புரியாமல் ஆடவும்கூடாது. அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* உயிர்களில் உயர்ந்தவன் மனிதன். உலகங்களில் உயர்ந்தது மண்ணுலகம். மனிதனைவிட உயர்ந்த ஒரு கடவுளை நம்மால் கற்பனை செய்ய முடியாது. எனவே நமது கடவுள் மனிதனே.
* இறைவனின் திருநாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். ஜபம் செய்வதன் மூலம் இறைவனின் எல்லையற்ற அருளை பக்தனால் அடையமுடியும்.
கொடுப்பவனாக இருங்கள்
* பக்தி, தியானம், ஒழுக்கம் மூன்றாலும் ஒருவன் தெய்வீக ஞானத்தை அடைய முடியும். வாய்மை என்னும் அடித்தளத்தின் மீது இப்பண்புகள் அமையும்போது, கடவுளை ஒருவன் உறுதியாக அடைந்து விடுவான்.
* உலக வாழ்வு நிரந்தரமானது என்னும் அறியாமை அகன்று விட்டால் பாவம் விலகிவிடும். பாவம் நீங்கினால் ஆசை, சுயநலம் மற்றும் அனைத்து துயரங்களும் நம்மை விட்டு காணாமல் போகும்.
* எப்போதும் கொடுப்பவனாக இருக்கப் பழகுங்கள். அன்பு, உதவி, நல்லெண்ணம், கருணை இவற்றைப் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். பதிலுக்கு பிறரிடமிருந்து எதையும் எதிர்பாராதீர்கள். இறைவன் எப்படி வாரி வழங்குகிறானோ அதுபோல நீங்களும் கொடுத்து வாழுங்கள்.
* மனித வாழ்வில் கடமைகள் துரத்துவதும், வருத்துவதும் உண்மையே. வாழ்வில் சுகங்களும் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்ற குறிக்கோளை மறக்காமல், இருளிலும் ஞான ஒளியை ஏந்திக் கொண்டு முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் வந்தே தீரும். ஆன்மிக எழுச்சி ஏற்படட்டும்!
* அன்பு, இரக்கம் இவற்றை செயல்படுத்த வாய்ப்பு அளித்த இறைவனை துதிப்பதுடன், உதவி செய்தவர்களை
இறைவனாக எண்ண வேண்டும்.
* இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகியவை நமக்குத் தேவை.
* மனிதப்பிறவி ஞானமும் பக்தியும் அடைவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதால், ஆன்மிக பலத்தால் மட்டுமே இந்தியா எழுச்சி பெறப்போகிறது.
* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகாமல், தைரியத்துடன்
வீரனாகத் திகழ வேண்டும்.
* இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் ஆன்மிக எழுச்சி உண்டாக வேண்டும். அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கு முன்னால், நாட்டை ஆன்மிக வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டும்.
* தன்னலம் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
* பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்
சுறுசுறுப்பாகத் திகழுங்கள்
* நம்முடைய உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் விஷம் என ஒதுக்கிவிட வேண்டும்.
* பிறருடைய தவறு எவ்வளவு கெட்டதாக இருந்தாலும் அதுபற்றி பேசக்கூடாது.
அப்படிச் செய்வதனால் நீங்கள் அவனுக்கு கேடு செய்வதுடன், உங்களுக்கும் கேடு
ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான், அவனே உலகில் நன்றாக வாழ
தகுதியுள்ளவன்.
* எதிலும் பரபரப்பு தேவையில்லை, ஆனால், சுறுசுறுப்பு எப்போதும் தேவை.
* கீழ்ப்படிதல், முயற்சியுடைமை, செயலாக்கம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவன் வெற்றி பெற்று
முன்னேறுவதை எதனாலும் தடுக்க முடியாது.
* உலகத்தில் உயர்ந்த செயல்கள் அனைத்தையும்
சாதித்தவர்கள் உங்களையும் என்னையும் போன்று
மனிதர்களே. வீரம் மட்டுமிருந்தால் நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும்,
* இயந்திரங்கள் மனித சமூகத்திற்கு சுகத்தைக்
கொடுத்தவையுமல்ல, கொடுக்கப் போவதுமில்லை.உலகத்தை காலடியில் வைக்க..
* பிறருடைய தவறைக் காண முயற்சிக்காமல், உங்களுடைய தவறை திருத்திக் கொள்ளுங்கள்.
* பெறாமை, ஆணவம் ஆகியவற்றைத்தூக்கி எறிந்து விட்டு, உன் முழுவலிமையுடனும், அளவற்ற ஆர்வத்துடனும், தொழிற்களத்தில் இறங்கினால் இறைவன் நல்வழி காட்டுவான்.
* தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் மனிதனுக்கு உறுதியான வெற்றியைத் தரும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வத்தன்மை இருக்கிறது, உள்ளேயும், வெளியேயும் இருக்கும் உணர்வுகளைக்
கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வத்தன்மையை மலரச் செய்வது தான் ஒருவருக்கு லட்சியமாக இருக்கவேண்டும்.
* அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்.
* நம்பிக்கை.. உன்னிடம் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை... இதுவே வெற்றி பெறுவதின் ரகசியம்.
* துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தெய்வீக இயல்பு நம்மிடம் வெளிப்படும்
பழக்கமே ஒழுக்கம் தரும்
கடவுளிடம் உறுதியாகவும், தூய்மையாகவும், நம்பிக்கை உடையவனாகவும் இருந்தால் வாழ்க்கையில் ஏற்படும்
அனைத்துவிதமான இடைஞ்சல்களும் மறைந்து போகும்.
* ஒழுக்கம் மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கத்தால் உருவாகிறது. பழக்கங்களால் தான் ஒழுக்கத்தை மேலும் சிறந்ததாகச் சீர்படுத்தி அமைக்க முடியும்.
* அனைத்துவிதமான அறிவும் மனிதனுக்குள் இருப்பதாக வேதாந்தம் கூறுகிறது, குறிப்பாக, சிறுவனிடமும்
இருக்கிற அறிவையும் விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியனுடைய கடமை.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்யும் வகையில் அவர்களுக்கு உதவுவது.
* நல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள், மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத்தானே தியாகம் செய்ய வேண்டும், உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாகத்தான் என்னுடைய நன்மையை நான் பெற முடியும், இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இயற்கையுடன் போர் செய்
* இடையறாத முயற்சியின் மூலம் நம்மை நாடி வரும் கஷ்டங்களை வெல்ல முடியும்.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை உள்ளவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாகிறாய்.
* வாழ்க்கையில் கீழ்ப்படிவதற்கு கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.
* அடக்கப்படாத மனம் நம்மைக் கீழ் நோக்கியே இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனம் நமக்குப் பாதுகாப்பளிப்பதுடன், விடுதலையும் தரும்.
* அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை ஆகியவை நமக்குத் தேவை.
* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு எப்போதும் போர் செய்வதே மனித முன்னேற்றத்தின் படிக்கற்களாகும்.
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது, ஆனால், ஈசனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் மிக நன்றாகும்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவேத நன்மை பெற நல்ல வழியாகும்.
பொறுப்பவர் பூமியாள்வார்
எப்போதும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரினையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் இரக்கத்துடன் பணி செய்தல் மிக நன்று.
* பூமிதேவியைப் போன்று அனைத்தையும் பொறுப்பவர் ஆக இருக்க வேண்டும். பொறுமையோடு இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.
* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான்.
* ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை.
* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும். மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. மறந்தால் மகிழ்ச்சி வரும்
மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இரக்கத்தால் மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் நன்மை தரும்.
* பொறுமை தான் அனைத்து பணிகளையும் செய்து முடித்து வெற்றி பெற ஆணிவேராக இருக்கும். பொறுமையுடன் உற்சாகத்தையும் கூட்டிவிட்டால், வெற்றியின் எல்லைக்கு விளிம்பே கிடையாது.
* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள், ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. கீழ்ப்படிவதே அதன் ரகசியம்.
* விருப்பங்களுக்கும், கோபத்திற்கும் அடிமையாய் இருப்பவனால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது.
* எந்தச்சூழலிலும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.
* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும், மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.புன்னகையோடு திகழுங்கள்
உனக்குள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளியே காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால், உன்னைச் சுற்றியுள்ள எல்லாம்

ஆன்மிக வெள்ளத்தில் மூழ்குவோம்* வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்னம்பிக்கையும், அடுத்தபடியாய் இறைவன் மீது நம்பிக்கையும் வேண்டும்.
* புகழ்ச்சியையும், அவமதிப்பையும் கருதாது என்றும் உண்மையை மேற்கொண்டு செய்யும் தியாகமே, சிறந்த தியாகம்.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.
* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.
* உலக நன்மைக்காக அவசியமாயின் உங்களிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யுங்கள், தூய்மை உடையவன் தான் கடவுளை மிக நெருக்கமானவன் ஆகிறான்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.
இறுதிவரைக்கும் போராடு!
* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார், இதைத் தவிரத் தனியாக வேறு கடவுள் இல்லை என்பதை பல தவங்களுக்குப் பிறகு புரிந்து கொண்டேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
* நேர்மையானவர்களாக இருந்தும் லட்சியத்தை பின்பற்ற முடியவில்லை என்றால் அது நமது பலவீனத்தாலேயே ஆகும். லட்சியத்தை அடைய இறுதி வரை போராட வேண்டும்.
* தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். பொறாமையை விலக்கினால் இதுவரையிலும் செய்யாத மகத்தான செயல்கள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள்.
* வாழ்க்கையில் வெற்றி பெற உலகம் எவ்வளவு பெரியதோ, அந்த அளவுக்கு உங்கள் இதயத்தையும் விரிவாக்குங்கள்.
* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. ஆனால், சேவை செய்ய முடியும், கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய். உனக்கு அப்படித் தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், ஆண்டவனுக்கே நீ தொண்டு செய்தவனாகிறாய்.
உள்ளத்தை திறந்து வை!
* இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம், குரல், தோற்றம் எல்லாமே மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக, இறைவன் எதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது.
* நமது உள்ளத்தை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்கள் ஆகிவிடுவோம்.
* தன்னை அடக்கப் பழகியவன் வெளியே உள்ள எதற்கும் வசப்படமாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனமும் இல்லை, அவனது மனமும் விடுதலை பெற்றுவிடுகிறது. அத்தகையவனே உலகத்தில் நன்றாக வாழும் தகுதி பெற்றவனாகிறான்.
* இறைவனுக்குப் பணி செய்ய விரும்புபவன் முதலில் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்களே அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனம் தளராதே! மதி மயங்காதே!
* நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றலை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஆன்மிக சக்தியாக மாற்ற வேண்டும்.
* நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.
* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.
* பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில் நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.* மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரிந்தாலு<ம் சரி, புரியாமல் போனாலும் சரி... உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போவதாக இருந்தாலும் சரி... உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணு அளவு கூட மாறிச்சென்று விடாதே.
* உங்களுக்குள்ளேயே தெய்வீகத் தன்மை ஒளிந்து கிடக்கிறது. அதை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதும் தான் முக்கியம்.
* "உதவி' என்ற சொல்லை உனது உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பது தெய்வத்தைக் குறை கூறுவதாகும். தெய்வத்தின் விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். தெய்வத்தை வழிபடத்தான் முடியுமே தவிர, தெய்வத்துக்கு உதவி செய்வதாக கூறுவது தவறாகும். தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை.
மனதைக் கையாள பயிற்சி
* இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக் கூடியவர்கள்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நீ வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
* அன்றைய தினம் மலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், நுகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாதகமலங்களில் இடுதற்குரிய தகுதி பெற்றவை, இறைவனும் அவற்றையே விரும்பிட ஏற்கிறான்.
* சிந்தனையின் ஆற்றல் தொண்ணூறு சதம் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே அவன் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்றவனோ தவறு செய்வதில்லை.* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார், இதைத்தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை, இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கின்றேன். மக்களுக்குச் சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான்.
* பிறருக்கு செய்ய வேண்டிய கடமை, உதவி புரிவதும், உலகிற்கு நன்மை செய்வதுமாகும். உலகிற்கு நன்மை செய்வதனால், உண்மையில் நமக்கு நாமே உதவி செய்து கொள்கிறோம். தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் பிறருக்கும் தீமை செய்கிறோம்.
* சிம்மாசனத்தில் வீற்றிருந்து தங்கத்தாலான அரண்மனையில் வாழ்ந்த போதும் அறவே சுயநலம் இல்லாதவனாக இருந்தால், அவன் கடவுளிடமே இருக்கிறான் என்று பொருளாகும். சுயநலமற்ற தன்மையே கடவுள்.
* அலைகள் சிறிதாக இருந்தாலும் அவை கடலினின்றும் வேறுபட்டவை அல்ல, கடலின் ஒரு பகுதி ஆகும். அது போல நாமும் மனிதர்களாயினும் தெய்வ சொரூபங்களே.
வலிமை பெறுபவன் இவனே!
ஒருவரிடம் அன்பு இல்லாவிட்டால், அவரிடம் எவ்வளவு கல்வி ஞானம் இருந்தாலும் கடவுளை அடைய முடியாது.
* இறைவனுக்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு கேலிக்குரியதல்ல.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்று மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கிருக்க வேண்டும்.
* மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத்தயாராக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே வலிமை கிட்டும். உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
விரலால் கூட தீண்டாதீர்கள்
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடியிருக்கிறேன், காய்கறி உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் என்று
நீ சொல்வதனால் ஆன்மிகவாதியாகிவிட மாட்டாய். இதெல்லாம் உன் பெருமையை பறைசாற்றவே உதவும்.
* ஆயுள் முழுவதும் நல்ல நூல்களைப் படிப்பதாலும், பேரறிஞர் ஆவதாலும் ஒருவன் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது. சொற்பொழிவு நிகழ்த்தி கூட்டம் சேர்ப்பதும் ஆன்மிகப் பேற்றை அடைய உதவாது. அன்பின் மூலமாகத் தான் ஆன்மிக உணர்வைப் பெற முடியும். அன்பிற்கே அத்தகைய வலிமை இருக்கிறது.
* மனதையும் உடலையும் பலவீனப்படுத்தும் எந்தப் பொருளையும் உன் விரலால் கூட தீண்டக்கூடாது. அதற்குரிய பக்குவத்தை நீ பெற்றால் தான் ஆன்மிகத்தின் நுனியிலாவது கால் வைக்க முடியும்.
* ஆன்மிக உணர்வைப் பெறாத வரை நம் நாடு நிச்சயமாக மறுமலர்ச்சி அடையாது. நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, ஆன்மிக வழிகளை பின்பற்றி நடக்க உறுதியெடுக்க வேண்டும்.
உழைப்பில்லாமல் உயர்வில்லை
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். வெற்றியா, தோல்வியா என்று சிந்தித்துக் கொண்டிருக்காமல், சேவையில் ஈடுபடுங்கள்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
* பெரியவர்கள் வாழ்வில் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவால் உண்டாகும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அந்த தெய்வ சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் வாழ்க்கையின் லட்சியம். இதற்காக புறவாழ்விலும், அகவாழ்விலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.
* அரிய செயல்கள் யாவும் பெரிய உழைப்பின்றி ஒரு போதும் முடிந்ததில்லை. அதனால், இடைவிடாமல் உழைத்து வாழ்வில் உயர்வு பெறுங்கள்.
எண்ணம் முழுவதும் இறைமயம்
கடவுளிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செலுத்துவதே உயர் பக்தியாகும்
* கடவுளிடம் உரிமையோடு கேட்பது, பண்டமாற்று முறையில் எதிர்பார்ப்புடன் வழிபடுவது, விருப்பு வெறுப்பின்றி அவரிடம் சரணடைவது ஆகிய மூன்று வகைகளில் மனிதன் கடவுளிடம் பக்தி செலுத்துகிறான். மூன்றாவது வகையே உயர்ந்தது.
*மனதில் ஞானம் உதயமாகி விட்டால், செயல்களின் பலன்களை கடவுளிடமே அர்ப்பணிக்கும் மனநிலை உண்டாகும். ஒரு கணம் கூட அந்நிலையில் இறைவனை மறக்க முடியாது.
* அன்றாடப்பணிகள் ஒவ்வொன்றும் கடவுளாலேயே நடக்கிறது. அவரை நினைத்து உண்ணவும், உறங்கவும், பேசவும் முயற்சியுங்கள். அவரே எல்லாம் என்பதை உணருங்கள்.
* கடவுளின் அருளை விட அவருடைய மேலான அடியவர்களின் அருளைப் பெற முயற்சியுங்கள். அவர்களின் தொடர்பு அவ்வளவு எளிதில் ஒருவருக்கு வாய்த்து விடுவதில்லை. உண்மையான அடியவரால் ஒருவரது வாழ்வின் போக்கையே மாற்றிவிட முடியும்
பிரதிபலன் எதிர்பாராதே!
* நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டதால், நம்முடன் வாழ்பவர்களை சகோதரர்களாக அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
* பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் பல நன்மைகளைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை உண்மையான பக்தி உண்டாகாது.
* மனிதன் பிறந்தது இயற்கையை வெல்வதற்காகத் தான். அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
* சக்தி என்பது நன்மை, தீமை என்னும் இருவழிகளில் வெளிப்படுகிறது. கடவுளும், தீயவனான அரக்கனும் எதிரெதிர் நீரோட்டம் உள்ள ஒரே ஆறுதான். நல்ல வழியில் சக்தியை செலவழிப்பதே உத்தமம்.
* இல்லறம் நடத்துபவனுக்கும், துறவறம் பூண்டவனுக்கும் இடையில் உயர்வு தாழ்வு இல்லை. அவரவர் நிலையில் அவரவர் சிறந்தவர்கள்.
* பக்தியில் ஈடுபடும் போது கடவுளைத் தனியாகவும், நம்மை வேறாகவும் பிரித்துப் பார்க்க வேண்டும். கடவுள் நம்பிக்கையின் பலன்
* நாம் முதலில் தெய்வங்களாவோம், பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம், "ஆகுக', "ஆக்குக' என்பவையே நமது குறிக்கோள்.
* பசியை போக்கிவிட்டு தத்துவ போதனைகளையும், சமய பிரசாரத்தையும் செய்யுங்கள், ஆன்மிகம் எழுச்சி பெறும்.
* மனிதனிடம் ஒளிந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வர புறவாழ்க்கையிலும், அக வாழ்க்கையிலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
* பெண்மையின் இலக்கணமாக சீதை, சாவித்திரி, தமயந்தி ஆகியோர் உள்ளனர். இவர்களை தினமும் நினைத்துப் பாருங்கள்.
* பரம்பொருளாகிய கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் நாம் பலம் பெற்றிருக்கிறோம். சிங்கம் போல் தைரியம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.
* பலமின்மையே துயரத்திற்குக் காரணம். பலவீனம் இல்லாதவனுக்கு மரணமும் இல்லை, துன்பமும் இல்லை.
* இறக்கும் வரை பணி செய்யுங்கள், சம்பாதிக்க வேண்டும் என்ற சாதாரண ஆசையில் முழ்கி ஒரு புழு போல இறப்பதைக் கைவிட வேண்டும்
ஏழைகளிடம் வசிக்கும் இறைவன்
* நன்மை பெற வேண்டுமானால் வாழும் தெய்வமாகிய மனிதர்களை வழிபடுங்கள். அதாவது ஒவ்வொரு மனிதனையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கம்.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கு தொண்டு செய்தவனாகிறோம்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே, அவரை உண்மையாக வணங்குபவனாவான்.
* எதிர்வாதம் எதுவுமின்றிக் குருவிற்குக் கீழ்ப்படிதலும், பிரம்மச்சரியத்தைக் கண்டிப்பாக பின் பற்றுதலும் வெற்றி பெறுதற்குரிய ரகசியங்களாகும்.
* பெரியவர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.

* எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். அச்சமுள்ளவன் உலகில் வாழத் தகுதியற்றவன்.
எல்லாரும் உயர்ந்தவர் தான்!
*நமது உள்ளங்களை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமைஉள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிற வரை உண்மையான பக்தி ஏற்படாது.
* தன்னை அடக்கியாளப் பழகியவன் வெளிஉலகிற்கு வசப்படமாட்டான். அடிமைத்தனமும் அவனிடம் இல்லை. அத்தகையவனே உலகத்தில் வாழ தகுதி பெறுகிறான்.
* மக்களின் எண்ணிக்கையே செல்வம். மாறாக வறுமை முக்கியமல்ல, சொல், செயல், சிந்தனைகளால் ஒன்றுபட்டு விளங்கும் ஒரு சிலரால் உலகையே ஆட்டி வைக்க முடியும்.
* கடலைப் பார்; அலையைப் பாராதே, எறும்பிற்கும் தேவதூதனுக்கும் இடையில் வேற்றுமை இல்லை. ஒவ்வொருவனும் தனது நிலையில் பெரியவனே.
* இயற்கையை எதிர்த்துப் போராடி வளர வேண்டும். இயற்கையோடு புரியும் ஓயாப் போரே மனித முன்னேற்றத்தின் படிக்கல்லாகும்
கடைசி பருக்கையையும் கொடு!
இறைவனுக்கு பணி செய்ய விரும்புபவர் மக்களுக்கும், உலக உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். ஈசனுக்கு தொண்டு செய்பவரே உத்தமத் தொண்டராவார்.
* ஏழைகளிடமும், பலமற்றவர்களிடமும், நோயுற்றவர்களிடமும் இறைவனைக் காண்பவனே இறைவனை உண்மையாக வணங்குபவனாவான்.
* கோயிலில் இறைவனை வணங்குபவனிடம் அடையும் மகிழ்ச்சியை விட, ஏழைக்கு பணி செய்பவனிடம் இறைவன் அடையும் மகிழ்ச்சி மேலானதாகும்.
* புண்ணியத்தலங்களை தரிசித்தவனிடம் தன்னலம் இருந்தால், இறைவன் அவனிடம் மிகத்தொலைவிலேயே இருப்பான். தன்னலத்தை மறந்து பொதுநலத்துடன் வாழ வேண்டும்.
* மனத்தளர்வு வெற்றிகரமான வாழ்வுக்கு வழிவகுக்காது. உறுதியோடும், இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுவே மேலான நன்மையை பெறவைக்கும்.
* பிறருக்கு வழங்கவே கையை இறைவன் படைத்தான். பட்டினியாக கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடு. பிறருக்கு வழங்குவதால் நீ முழுமையடைவதுடன், தெய்வமாகவும் மாறுவாய்
தவறுகளையும் வாழ்த்து!
* இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால் இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது மிக நல்லது.
* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள், இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்.
* விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையானால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
* கடவுளின் குழந்தைகளாகிய மனிதர்களுக்குத் தொண்டு செய். மனிதர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம் கடவுளுக்கு தொண்டு செய்தவனாகிறாய்.
* கடவுள் மீது நம்பிக்கை வைத்து துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டினால் உங்களுக்குத் தேவைப்படும் உதவி நிச்சயம் வந்தே தீரும்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அந்தத் தவறுகள், நீ அறியாமலேயே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன
வரலாறு உன்னை வாழ்த்தட்டும்!
பிறர் புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள்புரிவதில் இருந்து தவறமாட்டார். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழக்கூடாது.
* அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.
* எல்லா உயிர்களும் தெய்வம் என்பது உண்மையே. ஆனால், அனைத்திலும் உயர்ந்த தெய்வம் மனிதனே.
* உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற இதயம் படைத்த ஆண்மகனுக்கே திருமகளின் அருள் கிடைக்கும்.
* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவு தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
* நாம் அனைவரும் இப்போது கடுமையாக உழைப்போம். இது தூங்குவதற்கான தருணம் அல்ல.
* ஆணோ பெண்ணோ, வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் தன்னம்பிக்கை தான். என்னால் இயலாது என்று சொல்பவர்கள் வரலாற்று புத்தகத்தைக் கூட தொடுவதற்கு தகுதியற்றவர்கள்
நீங்கள் பாக்கியசாலிகள்!
நல்லவர்கள் பிறருடைய நன்மைக்காக வாழ்கின்றனர். உனக்கு நான் நன்மை செய்வதன் மூலமாக என்னுடைய நன்மையை நான் பெறமுடியும். இதைத்தவிர வேறு வழி இல்லை.
* தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் அனைத்து வழிபாடுகளின் சாரம்.
* இறைவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம்.
* நாய்க்கு சோறு கொடுக்கும் போது, அந்த நாயையும் கடவுளாகக் கருதி வழிபடு. ஏனெனில், அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார், எல்லாவற்றிலும் இருக்கிறார்.
* ஏழைகளிடம் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுபவன் ஆகிறான். விக்ரகத்தில் சிவனை வழிபடுவது ஆரம்பநிலை தான்.
பொறுமைக்கு பெரிய பரிசு
* நம்பிக்கையும் நேர்மையும் பக்தியும் உன்னிடம் இருக்கும் வரை அனைத்து செயலும் முன்னேற்றமடையும். இறைவன் அருளால் அபாயம் எதுவும் ஏற்படாது.
* பூமி மாதாவை போன்று அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தால், உலகமே உங்கள் காலடியில் அமரும்.
* நன்மைகளைப் பெற வேண்டுமானால், வாழும் தெய்வமாகிய ஒவ்வொரு மனிதனையும் வழிபடுங்கள்.
* ஏழைக்கு உதவி செய்வது என்பது, கோயிலில் சிவனை கண்டு வணங்குபவனிடம் சிவன் அடையும் மகிழ்ச்சியை விட மேலானதாகும்.
* கடவுள் வரம்பு கடந்த பெருமைகளை உடையவர். அவரை வணங்கி துய்மையான மனதைப் பெறலாம்.
* இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரையே எப்போதும் சார்ந்து நில்லுங்கள்.
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே. நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்தில் ஒருவன் கேட்டால், கடைசிப் பருக்கையையும் கொடுத்துவிடு. அப்போது, நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் ஆவாய்
ஆன்மிக பலமே நாட்டின் பலம்
* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்பியிருக்கிறது. அதுபோல, வளர்ந்த பின்னும் மனிதன் தன் தேவைகள் அனைத்திற்கும் உலகநாயகியான ஜகன்மாதாவையே நம்பி வாழ்கிறான்.
* அனைத்து சக்தியும் கொண்ட அம்பாள் கருணை வடிவத்துடன், எங்கும் நிறைந்திருக்கிறாள். உலகின் இயக்கத்திற்கு ஆதாரமாகத் திகழ்கிறாள்.
* இந்தியாவில் பெண்களுக்கு தரப்படும் மதிப்பு உயர்வானது. தெய்வத்தை அன்னையாகக் கருதி வழிபாடு செய்தால், ஆன்மிக வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* குழந்தைகள் தாயிடமே அதிக பாசத்தை காட்டுகின்றனர். இதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாய்க்கு முதலிடம் தரப்பட்டுள்ளது.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே நாடு எழுச்சி அடையப்போகிறது. கடவுளிடம் கொண்ட நம்பிக்கையால் இந்திய மக்கள் பலம் பெற்றிருக்கிறார்கள்.
* மனிதன் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளனாக இருக்கிறான். அவனுக்கு தேவையான அனைத்து வலிமையும், உதவியும் அவனுக்குள்ளேயே இருக்கிறது.
உறுதியுடன் செயல்படுங்கள்!
* தெய்வத்தைப்பற்றி பேசும்போது பசியால் நலிந்து வாழும் மக்களிடையே பேசுவதால் எந்த பயனும் இல்லை. அது அவர்களை அவமதிப்பது போல் ஆகும். பசித்தவனிடம் ஆன்மிகம் பேசி பயனில்லை.
* மனிதனிடம் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அதைவெளிக்கொண்டு வருவது தான் லட்சியமாக இருக்க வேண்டும்.
* முதலில் நாம் தெய்வங்களாவோம். பின்னர் பிறரை தெய்வங்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். "ஆகுக', "ஆக்குக' என்பதே நமது குறிக்கோள்.
* நீதி நூல்களின் லட்சியம் சுயநலமின்மையே. பிறருடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு சிந்திப்பது சிங்கத்திற்கு சமமான ஆற்றலை இதயத்திற்கு தருகிறது.
* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து மனவுறுதிடன் வீரனாக இருங்கள், மனிதனாகப் பிறந்திருக்கிறீர்கள், வாழ்ந்து மறைந்த பிறகு ஒரு அழியாத அறிகுறியை விட்டு செல்லுங்கள். உறுதியுடன் செயல்படுங்கள்
அதிகம் பெருமைப்படாதே!
* நல்ல நூல்களைப் படிப்பது, சொற்பொழிவுகளை நடத்துவது இவற்றைவிட அன்பால் மட்டுமே ஆன்மிகத்தில் மேம்படமுடியும்.
* தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு மனப்பூர்வமாக இறைவனை வழிபட்டால், அவன் இருப்பதை உணரலாம்.
* பக்தனாக விரும்புகிறவன், சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளை துவக்கத்திலேயே விட்டுவிட வேண்டும்.
* வெறுப்பையும், கோப உணர்ச்சியையும் அடக்கும் போது, அந்த அளவிற்கு நல்ல ஆற்றலை சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த ஆன்மிக சக்தியாக மாறுகிறது.
* ஆன்மிக அறிவால் மட்டுமே நமது துன்பங்களை என்றென்றைக்கும் ஒழிக்க முடியும். மற்ற அனைத்து அறிவும் அதை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நீக்கும்.
* உன்னைப்பற்றி அளவுக்கு மீறி பெருமை கொள்ளாதே. பிறர் பெறாத அந்த புகழை உனக்கு அளித்தது இறைவனின் அருளே. அதை ஒரு வழிபாடாக செய்.
வாழ்வதற்கு வேண்டிய தகுதி
வாழ்க்கையில் எப்போதும் தூய்மை உடையவன் கடவுளுக்கு மிக நெருங்கியவனாகிறான்.
* ஏமாற்றுவதால் எதையும் செய்து விட முடியாது. அன்பாலும், ஆர்வத்தாலும், ஆன்மிக சக்தியாலுமே பெரிய செயல்களை நிறைவேற்ற முடியும்.
* பிறருக்காக செய்யும் சிறிய முயற்சி உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது, பிறருக்காக நன்மையை எண்ணுவதால் சிங்கத்தின் பலம் இதயத்திற்கு கிடைக்கிறது.
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதியுள்ளவன்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள். பணம் சக்தியல்ல, நன்மையும் தெய்வ பக்தியுமே சக்தி.
* தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியை உண்டு பண்ணுவதே உண்மைக் கல்வி.
* அனைத்தையும் செவிசாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாய்ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
* உயிரும், மனமும் இணைந்து செயல்பட்டால், எந்தச் செயலையும் செய்து வெற்றி பெறலாம்.
வெற்றி பெற்றவர்களை கவனி!
நாம் முன்னேற முதலில் நம்மிடம் நம்பிக்கை வேண்டும்; பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன் கடவுளிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.
* உள்ளத்துக்குள் இருக்கும் அனைத்தையும் துறந்துவிடு, வைராக்கியத்தைக் கடைபிடி, இதுவே உண்மையான தியாகம். இது இல்லாமல் உனக்கு ஆன்மிகம் கிடையாது.
* உள்ளம் தூய்மையானால் உலகமும் தூயதாகிவிடும். இந்த உண்மையை உலகுக்கு கூற வேண்டிய அவசியம், முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
* கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்கு கொடுத்திருக்கின்ற அனைத்தும், பிறருக்குக் கொடுப்பதற்குத் தான்.
* வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களைக் கவனி. ஒவ்வொருவரின் பின்னணியிலும், அளவற்ற கடமையுணர்வும், நேர்மையும் இருந்தே தீரும்.
* ஆன்மிகத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடுதான்.
செய்ய முடியும் என்று நம்பு!
* கடவுளைக் காண மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். பட்டினியால் வாடும் ஏழைகளை நாராயணர்களாக பாருங்கள்.
* உங்களை உடல் அளவிலோ, அறிவு அளவிலோ, ஆன்மிக அளவிலோ ஏதாவது ஒரு விஷயம் பலவீனமாக்கினால், அதை விஷமாகக் கருதி உதறித்தள்ளுங்கள்.
* இறைவன் ஒரு சக்தி மட்டுமல்ல, அவரே உண்மையும் கூட. இதை உணர்ந்து உண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
* திறக்க முடியாத அனைத்து வாசல்களையும் அன்பு திறக்கிறது. உலகின் அனைத்து ரகசியங்களுக்கும் வாசல் அன்பு தான்.
* கால்பந்து விளையாடி விட்டு, கீதை படித்தால் மனதில் நன்றாகப் பதியும். ரத்தத்தில் வேகமிருந்தால் தான், பகவான் கிருஷ்ணரின் அறிவையும், ஆற்றலையும் அறிய முடியும்.
* நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் உள்ளது.
* முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டே உதறித்தள்ளுங்கள். உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
வாழ்வில் உயர வேண்டுமா
* உண்மை அல்லாதவற்றில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மை மீது பிடிப்புள்ளவர்களாக இருங்கள். உண்மை நிச்சயம் வெற்றி பெறும்.
* உண்மையையும், அன்பையும், தூய உள்ளத்தையும் எதுவும் எதிர்த்து நிற்க முடியாது. உண்மையானவர்களாக இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை.
* நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு, கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல உன்னைத் தயார் செய்து கொள்.
* வாழ்க்கையில் அனைத்து தீமைகளையும் எதிர்த்து போரிடு. வெளியில் நடப்பதை மட்டுமல்ல! உனக்குள் ஏற்படும் தீமைகளோடும் போரிட்டுக் கொண்டே இரு.
* உயர்ந்த லட்சியம், தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகியவற்றுடன், நேர்மையும் மனிதனுக்கு அவசியம். நேர் வழியிலேயே முன்னேற வேண்டும்.
அமைதியும் ஆண்மையும்
இறைவன் தான் நமக்கு உதவி செய்ய முடியுமே தவிர, இறைவனுக்கு நம்மால் உதவ முடியாது. எனவே, இறைவனுக்கு உதவுகிறேன் (இறைப்பணி செய்கிறேன்) என்ற சொல்லை உள்ளத்திலிருந்து நீக்கி விடுங்கள்.
* நாய்க்குட்டிக்கு சோறு வழங்கும் போது, அந்த நாயையும் கடவுளாகப் பாவித்து வழிபடுங்கள். ஏனெனில், நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார்.
* ஏழைகள், நோயாளிகள், பலவீனர்களிடம் இறைவனை காண்பவரே உண்மையில் அவரை வழிபடுகிறவர் ஆவார்.
* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டு இருக்கிறார் என்பதால், மக்களுக்கு சேவை செய்பவன், கடவுளுக்கே சேவை செய்பவன் ஆகிறான்.
* அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.
* பெறத் தகுதியுடையவர், எந்த பொருளாக இருந்தாலும் அதைப் பெற்றே தீருவார். அதை தடுக்கும் சக்தி, உலகில் எங்கும் இல்லை.
* உலகில் ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவை
வலிமை குறித்து சிந்தியுங்கள்
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* அறிவுச்சுரங்கத்தை திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடு மட்டுமே. மன ஒருமையால் இயற்கையைக் கூட நம்மால் வெல்ல முடியும்.
* கடவுளின் குழந்தைகளான நீங்கள் வலிமை உடையவர் என்று நினைத்தால் வலிமை படைத்தவர் ஆவீர்கள்.
* பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.
* மனிதனிடம் மறைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது கல்வி. முதலில் கீழ்ப்படிய கற்றுக் கொண்டால் கட்டளையிடும் பதவியை தானாகப் பெற்று மகிழ்வீர்கள்.
* அனைத்து தேவைகளை நிறைவேற்றவும், அனைத்து துன்பங்களையும் நீக்கும் பேராற்றல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை உணருங்கள்.
இனிமையான சொர்க்கம்
* மனித இதயத்தின் ஆழப் பகுதியிலும், அணுவிற்குள்ளும் ஆதி அந்தம் இல்லா இறைவன் தன்னை ஒளித்துக் கொண்டிருக்கிறான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன்.
* வாழ்வில் ஏற்படும் தவறுகளை பெறும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்.
* கருணை என்பது இனிமையான சொர்க்கம். நாம் அனைவரும் வாழ்வில் கருணை நிறைந்தவர்களாக மாறினால், இங்கேயே சொர்க்க வாழ்வை அனுபவிக்கலாம்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத்தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அதைத் தட்டி எழுப்புங்கள். நன்மை செய்யும் மனநிலையைப் பெறுங்கள்.
* வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும், அது இறைவழிபாட்டுக்கு சமமானதாக இருக்கட்டும்.
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம். உறுதியுடன் எதையும் செய்யுங்கள். வெற்றிக்கனி உங்களுக்கே
எங்கும் இருக்கும் சொர்க்கம்
* கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பக்தியுடன் செய்வது தெய்வ வழிபாட்டிற்கு சமமானது.
* கடவுளிடம் மட்டுமே அனைத்து இயல்புகளும் இருக்க முடியும். ஆனால், மனிதனாய் பிறந்து, நற்செயல்களைச் செய்தால் மட்டுமே அவரைக் காண முடியும்.
* இந்த பூலோகத்தில் நமக்கு நாமே சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ள வழியிருக்கிறது. ஏன்...நரகத்தில் கூட சொர்க்கத்தை உருவாக்க நம்மால் முடியும்.
* கடவுளால் தான் கோயிலுக்கு மகிமை. கோயிலால் இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை.
* நாம் அன்பிற்காகக் கடவுளிடம் அன்பு செய்ய வேண்டும். கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்.
* உண்மை, தூய்மை, தன்னலமின்மை பெற்றவர்களை அழிக்க வானுலகிலும், மண்ணுலகிலும் எந்தச்சக்தியும் இல்லை.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை, பிறருக்கு உதவி செய்வதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.
* அன்பான செயல்கள் மட்டுமே இனிமையானதாக இருக்க முடியும். சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்கும்.
தெய்வத்தன்மையை இழக்காதீர்
* தெய்வீகம் எப்போதும் மனிதனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்து எழுந்திருக்கச் செய்யுங்கள்.
* ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான். கடமையில் பக்தியுடன் இருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறர் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கு உதவி செய்வதே.
* இன்னல்கள் அனைத்துக்கும் நடுவிலும், நமது தெய்வத்தன்மையை இழக்காமல் இருக்க வேண்டும்.
* கோயிலாலோ, விக்ரகத்தின் அழகாலோ இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை. கடவுளால் தான் அவற்றுக்குப் பெருமை.
* பணத்திற்காக, உடல்நலத்திற்காக, சொர்க்கத்திற்காக, ஞானத்திற்காக அல்லாமல் மன சுத்தத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிற பிரார்த்தனைகள் அனைத்தும் சுயநலம் தான்.
உள்ளம் சொல்வதைக் கேள்!
. கடவுளை அவருடைய அருளால் பார்க்க முடியும். கடவுள் நமக்கு அருகில் இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார்.
* உயர்ந்த மனநிலைக்கு ஒருவனை அழைத்துச் செல்வது அறிவாற்றலே. அப்போது இதயம் தெய்வீக நிலையை அடைகிறது.
* பண்புடையவர்களிடம் நம்பிக்கை, நேர்மை, பக்தி ஆகிய குணங்கள் தானாகவே வந்துவிடும். இந்த குணங்கள் உள்ளவர்களுக்கு எந்த ஆபத்தும் நிகழ்வதில்லை.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய மூன்றையும் பெற்றுள்ள ஒருவனை, உலகமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு. அவன் எதிலும் வெற்றி பெறுவான்.
* அறிவு, உள்ளம் இவ்விரண்டில் எதைப்பின்பற்றுவது என மனதில் போராட்டம் எழும் போது, உள்ளம் சொல்வதையே பின்பற்றுங்கள். உள்ளமே மனிதனின் கண்ணாடியாக இருக்கிறது.
- விவேகானந்தர்உள்ளம் சொல்வதைக் கேள்!
* கடவுளை அவருடைய அருளால் பார்க்க முடியும். கடவுள் நமக்கு அருகில் இருந்தாலும், தேடினால் மட்டுமே காணக்கூடியவராக இருக்கிறார்.

பெயர் நிலைக்க வேண்டும்* குழந்தை தன் தேவைக்கு தாயை நம்புவது போல், பெரியவர்கள் தன் தேவைக்கு அம்பிகையை நம்பி வாழ்கிறார்கள்.
* தெய்வத்தை அன்னையாக வழிபாடு செய்யும் போது, வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* அம்பாள் கருணையே வடிவானவள். அனைத்து சக்தியும் கொண்டவள். எங்கும் நிறைந்தவள்.
* உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியும் திரண்டு நிற்கும் தெய்வீக வடிவே அம்பாள். அவளே உலக இயக்கத்துக்கு ஆதாரமாக இருக்கிறாள்.
* நல்ல லட்சியத்தைத் தேர்வு செய்து தைரியத்துடன் வீரனாக இருங்கள். வாழ்ந்து மறையும் போது, உங்கள் பெயர் நிலைத்திருக்கும் வகையில், அழியாத அறிகுறி ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
* மகத்தான செயல்களைச் செய்வதற்காக இறைவன் நம்மை படைத்திருக்கிறான். அந்தச் செயல்களை நாம் செய்து முடிப்போம்.
* வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும், பெரும் மன உறுதியும் வேண்டும். விடாமுயற்சி செய்பவன் கடலையே குடித்துவிடுவான்.வெற்றியின் ரகசியம் எது
வெற்றியின் ரகசியம் எது
* மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள், பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.
* இரக்கத்தால் மனிதருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனின் படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது மிக மிக நல்லது.
* வாழ்க்கையில் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது ஒருவனை இறைவன் அருகில் கொண்டு செல்லும்.
* நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை - இதுவே வெற்றி பெறுவதின் ரகசியம்.
* வெற்றி பெறுவதற்கு, நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மன உறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை, வளர்ச்சி அடைவது தான் வாழ்க்கை.
* புனிதமான எண்ணங்களை தொடர்ந்து சிந்தித்தபடி, அனைவருக்கும் நன்மை செய்து கொண்டிருங்கள்.
சொந்தக்காலில் நிற்கப் பழகு
*சோம்பேறித் தனத்தை எந்த வழியிலாவது துரத்தி விடுங்கள். சுறுசுறுப்பு என்னும் எதிர்ப்பால் சோம்பலைத் தூக்கி எறியுங்கள்.
* அளவற்ற பலமும், பெண்ணைப் போல இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே வீரன் ஆவான்.
* இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச்சக்கரம் சுழல்வதற்கு பலமிக்க உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
* தன்னம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சிலரின் வரலாறே உலக சரித்திரமாக இருக்கிறது.
* பொறாமை நமக்கு வேண்டவே வேண்டாம். கீழ்த்தரமான தந்திரத்தால் எந்தச் செயலையும் சாதித்து விட முடியாது.
* யாருடைய இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் வடிக்கிறதோ, அவரே மகாத்மா.
* ஆன்மிகத்தை சரியான வழியில் பின்பற்றாமல் போனதால் சமுதாயம் வீழ்ச்சியடைந்து விட்டது.
* சொந்தக்காலில் நிற்கப்பழகுவதே கல்வியின் அடிப்படை லட்சியமாக இருக்க வேண்டும்.
அமைதி பெற என்ன வழி
* அகத்தூய்மை இல்லாவிட்டால் புறத்தூய்மையால் பயனேதும் இல்லை. ஆன்மிக ஒளியற்ற மனிதன் எவ்வளவு அழகுடையவனாக இருந்தாலும் விலங்குக்குச் சமமாவான்.
* மனத்தூய்மை பெற்று விட்டால் நம்மிடம் உயர்குணங்கள் மேலோங்கும். மனம் ஒருமுகப்படும். உற்சாகம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்.
* இறைவன் பெரிய காந்தக்கல்லைப் போல இருக்கிறார். நாம் அனைவரும் இரும்புத்துகள் போல அவரால் கவரப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
* வாழ்நாளில் நாம் செய்ய வேண்டிய வேலை என்ன தெரியுமா. காந்தக் கல் போல இருக்கும் இறைவனை அணுகிச் செல்வது மட்டும் தான்.
* இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டால் வாழ்வில் இருக்கும் போராட்டம், கொந்தளிப்பு அனைத்தும் நீங்கி அமைதி பெற்று விடுவோம்.
* கடவுள் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உண்மையானதாக இருக்குமானால், உங்களுடையது என கருதுகின்ற அனைத்தும் அவருடையது என்று நம்புங்கள்.
கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்
சொந்தக்காலில் நில்லுங்கள்
தடைகளைத் தகர்க்கும் வழி
ஐந்து விஷயம் கூட போதும்!
மதங்களின் ஒரே குறிக்கோள்
நல்ல மனிதனாக வாழ்வோமே!
உண்மையைப் பின்பற்றுங்கள்Key word: விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
கடவுளுக்கு நெருக்கமானவர்
மனிதனும் தெய்வ வடிவமே!
உன்னை மறைத்துக் கொள்
உங்களின் சிறந்த ஆசான்
கஷ்டங்களை வெல்வது எப்படி?
உன் கடமை புனிதமானது
தெய்வத்திற்கு மிஞ்சிய சக்தியில்லை

உள
* எவராலும் தமது சொந்த ஆன்மாவையோ, கடவுளையோ அறிய இயலாது. ஆனால், நாம் ஆன்மாவாகவும், கடவுளாகவும் உள்ளோம்.
* பண்டைக்காலத்தில் கடவுளை மறுப்பதே நாத்திகமாகயிருந்தது. இப்போது தன்னம்பிக்கையை மறுப்பது நாத்திகமாக உள்ளது.
* நம்முடைய பிரார்த்தனைகளில் கடவுளை நம் தந்தையாக ஒப்புக் கொண்டு விட்டு, அன்றாட வாழ்க்கையில் வெளியாரை நம் சகோதரர்களாக அங்கீகரிக்காமலிருப்பதில் நியாயமில்லை.
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கும் வரை உண்மையான அன்பு உண்டாகாது.
* உலகத்தில் அனைத்தையும் துறந்து, மன உணர்ச்சிகளின் தீவிரத்தை அடக்கிக் கொண்டு அமைதியை
நாடுகிறவனே சுதந்திர புருஷனும் பெரியோனும் ஆவான்.
* நமது உள்ளங்களை நாம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்திலுள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.
* நாம் அனைவரும் விளக்குகளைப் போல பிறருக்கு ஒளி கொடுத்து பயனுள்ள வாழ்க்கை வாழ்வோம்.
*உன் உடலில் ஏற்பட்டுள்ள கறையைப் பற்றிக் கவலைப்படாதே. இறைவன் என்னும் கருணைக்கடலில் மூழ்கி எழுந்தால், அது இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
*உங்களிடம் அன்பு இருந்தால் ஆகாத செயல் என்று எதுவுமில்லை. நீங்கள் தன்னலத்தை துறந்து விட்டால் உங்களை எதிர்க்கும் சக்தி ஏதுமில்லை.
*நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். அதனால், புனிதமும் பூரணத்துவமும் உங்களிடம் நிறைந்திருக்கிறது.
* அன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.
* ஒட்டகம் முள் செடியைச் சாப்பிடும் போது வாயிலிருந்து ரத்தம் சொட்டும், இருந்தாலும் தின்பதை நிறுத்துவதில்லை. அதுபோல உலகத்தார் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானாலும் உலகப்பற்றை அவர்கள் விடுவதில்லை.
* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.
இரண்டுக்கும் வாழ்த்து கூறு!
நாள் கணக்கில் சிந்தியுங்கள்பாமரனைப் பண்புள்ளவனாகவும்,
பண்புள்ளவனைத் தெய்வமாகவும்
உயர்த்தும் கருத்தே மதம்.
* உற்சாகத்துடன் இருக்கத் துவங்குவது தான், நீ ஆன்மிக வாழ்க்கை வாழ ஆரம்பிப்
பதற்கான முதல் அறிகுறி.
*நீ செய்த தவறுகளை வாழ்த்து; அந்தத்
தவறுகள் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும்
தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களாக இருந்திருக்கின்றன. துன்பங்களுக்கும் நல்
வாழ்த்துக்கள்! இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. இவை
அனைத்திற்கும் மேலாக அன்பு வேண்டும்.
*அடுத்தவர்களின் பாதையைப் பின்பற்றக்கூடாது.
காரணம் அது அவர்களுடைய பாதை, உன்னுடையதுஅல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து
விட்டால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
*கடவுள் விருப்பு வெறுப்பற்றவர். உலகம், உயிர்கள், அண்ட சராசரங்கள் அனைத்திடமும் அவர் அன்பு செலுத்துகிறார்.
இறைவனை மட்டுமே சார்ந்திரு!
மனிதத் துணை அனைத்தையும் விட இறைவன் எல்லையற்ற பெருமையை உடையவனாகிறான். இறைவனிடம்
நம்பிக்கை கொள். அவரையே எப்போதும் சார்ந்திரு; அப்போது நன்னெறியில் செல்வாய். எதனாலும் உன்னை வெல்ல முடியாது.
* இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்கள் அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
* பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரே விதமதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால், பொருளாதாரப் பிரச்னையைத் தீர்ப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன.
* ஒரு லட்சிய மதத்தின் நோக்கம் இவ்வுலக வாழ்விற்கும் உதவ வேண்டும். மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும். அதே வேளையில், இறப்பையும் ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.
* மதத்தைப் பற்றிக் கொண்டு சண்டையில் இறங்காதே, மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும். அறிவும் வெளியேறி இதயம் வறளும் போது தான் சண்டைகள் தொடங்கும்; அதற்கு முன்னால் அல்ல.
நாள் கணக்கில் சிந்தியுங்கள்
* அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில்
எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே
நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த
மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த
மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ,
அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து
நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை
உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள்,
நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.
பிப்ரவரி 04,2011,
00:02 IST
00:02 IST
* கடவுள் பிரம்மாண்டமான பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் மையம்,
எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து
இருக்கிறது. அந்த மையம் தான் மனிதன்.
* நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்
படுத்த ஒரே வழி, மற்றவர்கள் தங்கள்
தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்வது தான்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்குச் சேவை
செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை
செய்பவனாகிறான்.
* தன்னலமற்ற மனப்பான்மை தான் ஆன்மிக வாழ்வின் அடிப்படை. இதை கொண்டே ஒருவரின் ஆன்மிகத்
தேடுதலை சோதிக்க வேண்டும். சுயநலம்
இல்லாதவனே, ஆன்மிக வாழ்க்கையைப்
பெற்றவனாகிறான்.
* தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்
களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச்
செய்வதனால், நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்து கொள்கிறோம்.
புன்னகையுடன் திகழுங்கள்எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்து

No comments:
Post a Comment