Pages

Friday, 22 June 2012

நயன்தாரா முடிந்து போன விஷயம்

 நயன்தாரா முடிந்து போன விஷயம்! - பிரபுதேவா!!

30தென்னிந்திய திரையுலகையே கடந்த சில ஆண்டுகளாக கலக்கிய பிரபுதேவா, நயன்தாரா காதல் விவகாரம் இப்போது கப்சிப் ஆகி விட்டது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, காதல் தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுதேவா தன் காதலுக்கு தகுதியில்லாதவர் என்றெல்லாம் நயன்தாரா குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு நீண்டநாட்களாக பதிலளிக்காமல் இருந்த பிரபுதேவா தற்போது பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், இத்தனை நாள் பேசக்கூடாது என்று இருந்தேன். இப்போது இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் ஏதோ ஒன்று பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அவரைப் பற்றி கேட்காதீர்கள். அது முடிந்து போன விஷயம். இப்போது எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிஸியும் கூட, என்று கூறியிருக்கிறார். நல்ல பாலிஸி!

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads