Pages

Friday, 22 June 2012

இன்ஜி., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை: ஆன்லைனில்

காரைக்குடி:

பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டு பி.இ., பி.டெக்., சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அழகப்பா பொறியியல் கல்லூரி செயலாளர் மாலா தெரிவித்தார்
.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2ம் ஆண்டில் சேர, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஜூலை 2வது வாரத்தில் கவுன்சிலிங் நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் 33 மையங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க கடைசி நாள் ஜூன் 25.
விண்ணப்பம் பெற குறுகிய நாட்களே உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி, ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.300க்கான வங்கி காசோலையை இணைக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணமில்லை. ஜாதி சான்றிதழ் இணைக்க வேண்டும்.
பாலிடெக்னிக் மதிப்பெண் சான்று பெற காலதாமதம் ஆவதால், ஆன்லைனில் மதிப்பெண்ணை எடுத்து, கல்லூரி முதல்வர் கையெழுத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். கவுன்சிலிங் வரும்போது ஒரிஜினல் சான்று அவசியம். 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றார்.
Key word:கல்வி ,பி.இ., பி.டெக்.,

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads