Pages

Friday, 22 June 2012

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலைமுடி ரூ.61 கோடிக்கு ஏலம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கடந்த 6 மாதத்தில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி ரூ.61 கோடியே 72 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இந்த தகவலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. நேற்று முன்தினம் 35 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருந்தனர்.
திருப்பதி கோவிலில் மழை வேண்டி இன்று வருண யாகம் நடந்தது. இதில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜூ மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads