Pages

Saturday, 2 June 2012

நோய் தீர்க்கும் தன்வந்திரி

       தன்வந்திரி பகவானைத் தரிசிப்பது, தன்வந்திரி படத்தை வைத்துப் பூஜிப்பதும் சிறந்த பலனைத் தரும். புதன் கிழமைகளில் மாலையில் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வந்தால் நோயில் இருந்து விடுபடலாம். பொதுவாக ஜென்ம நட்சத்திர நாட்கள், சந்திராஷ்டம தினங்கள், 7-வது நட்சத்திரம் வரும் நாட்களில் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் தாமதித்துச் செய்தால் நற்பலன்களை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை போன்றவற்றை இந்நாட்களில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
        பல நாட்களாக நோயாளியாக உள்ளவர்களுக்கு ஆண் என்றால் அமாவாசை திதியும், பெண் என்றால் கிருத்திகையும், அதிக கெடுதியையும் கண்டத்தையும் உண்டாகும். பல நாட்களாக நோய் வாய்ப்பட்டவர்களை சுபநட்சத்திரங்களான அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சத்யம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாளில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளச் செய்தால் விரைவில் குணமாகிவிடும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads