சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் தல அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா தற்போது அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது. சிவா சொன்ன கதையைக் கேட்ட அனுஷ்கா இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளாராம். விரைவில் கால்ஷீட் தருவார் என்று சிவா மலை போல் நம்புகிறாராம் இயக்குநர். அப்படி அனுஷ்கா ஒப்புக் கொண்டால் அஜித்துடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment