Pages

Tuesday, 5 June 2012

வானில் நிகழ்ந்த அதிசயம்- சூரியன், வெள்ளி, பூமி நேர் கோட்டில்

வானில் நிகழ்ந்த அதிசயம்!
சென்னை: சூரியன், வெள்ளி கோள் மற்றும் பூமி ஆகியவை, ஒரே நேர் கோட்டில் வரும் அபூர்வ நிகழ்வு இன்று காலை நிகழ்ந்தது. இந்த அறிய காட்சியை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஆசிய கண்டம் முழுவதிலும் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகி்ன்றன.
ஒரே நேர்க்கோட்டில் வரும் இந்த காட்சியை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.வெள்ளிக் கோள் இடைமறிப்பு என்பது மிகவும் அரிதான ஒன்று. இப்பாதை பூமிவலம்வரும் தளத்தினை ஜூன் முதல் வாரத்தில் அல்லது டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இது போன்ற இடைமறிப்பு நடக்கும்.
அந்த அரிய நிகழ்வு இன்று அதிகாலை ஏற்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் இந்த நிகழ்வு ஏற்பட்டது. தமிழகத்தில் இன்று காலை 5.22 மணிக்கு நிகழத்துவங்கியது. இன்று 10.22 மணிவரை இந்த அரிய நிகழ்வு நீடிக்கும். இதனை ‌சென்னை மெரினா,பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.தென்கொரியா, அமெரி்க்காவிலும் இந்த வெள்ளி இட நகர்வு நிகழ்ந்தது.
இது குறித்து திட்ட நாசா விஞ்ஞானி டீன் பெஸ்நெல் கூறியதாவது; இனி இதுபோன்ற அரிய நிகழ்வு வரும் 2117-ம் ஆண்டில் நிகழலாம் என்றார். நாசா இணையதளத்தில் வெள்ளி நகர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஜோடி இடை மறிப்பு, 121.5 ஆண்டு காலம்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads