Pages

Wednesday, 6 June 2012

அஜீத்தின் பில்லா 2, கார்த்தியின் சகுனி: ரிலீஸ் தேதி அறிவிப்பு



அஜீத்தின் 'பில்லா 2' கார்த்தியின் 'சகுனி' படங்கள் ரிலீசாகும் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. 'பில்லா 2' வருகிற (ஜூன்) 22-ந்தேதி வெளியாகிறது. சகுனி இரண்டு வாரம் இடைவெளியிட்டு ஜூலை 6-ல் வருகிறது
.

இரு படங்களுமே மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாகவும் உள்ளன. கடந்த சில மாதங்களாக பெரிய பட்ஜெட் படங்கள் வரவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டால் அவற்றை நிறுத்தி வைத்து இருந்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் 'பில்லா 2', 'சகுனி' படங்கள் வருகிறது. 'பில்லா 2'-வில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்கி உள்ளார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். சாதாரண இளைஞன் பயங்கர தாதாவாக மாறுவதே இப் படத்தின் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துள்ளது.

சகுனியில் கார்த்தி ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார். சங்கர் தயாள் இயக்கி உள்ளார். 'இசை இளவல்' ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அரசியல் கதையாக சகுனி தயாராகி உள்ளது.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads