Pages

Tuesday, 5 June 2012

கருணாநிதி 89-வது பிறந்த நாள் இணைய தளத்தில்

 தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தி.மு.க. மாணவர் அணி சார்பில் தனி இணைய தளம் தொடங்கப்பட்டது. தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனது முதல் வாழ்த்தினை பதிவு செய்து 2-ந்தேதி அன்று தொடங்கி வைத்தார்.
 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவீடன், இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, சவுதி அரேபியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநி லங்களிலிருந்தும் 87,213 பேர் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தனர்.
 ஆஸ்திரேலியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மெல்போர்ன் மேயர் ராபர்ட் டாயல் ஆகியோரும் இப்பட்டியலில் அடங்குவர். குறிப்பாக கனடா நாட்டில் உள்ள தமிழ்ஈழ ஆதரவாளர் குழு பிரதிநிதி நிரஞ்சனும் அவரது ஆதரவாளர்களும் தனித்தமிழ் ஈழம் உருவாக்கிட தங்களால் மட்டுமே முடியும் தலைவா! என்றும், எங்கள் தமிழ்ஈழக் கனவினை நனவாக்குவது தங்கள் கைகளில்தான் உள்ளது என்றும் உருக்கமாக செய்தியுடன், தங்கள் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்தனர்.
 அதோடு, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள தமிழ்ஈழ ஆதரவாளர்களும் இதுபோன்றே வாழ்த்துச் செய்தினை அனுப்பியுள்ளனர். இது இணைய தள வரலாற்றில், ஆசியக் கண்டத்திலேயே இந்த அளவு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது தி.மு.க. தலைவர் ஒருவருக்குத்தான் என்பது வரலாற்று சாதனை.
 உலகெங்குமுள்ள தமிழர்கள் தெரிவித்த 87,213 வாழ்த்துக்களையும், தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி இன்று காலை, கோபாலபுரம் இல்லத்தில் மடிக்கணினி வாயிலாக தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் காண்பித்தார். நிகழ்ச்சியின்போது மாணவர் அணி துணைச் செயலாளர் பூவை ஜெரால்டு மற்றும் பா.அருண், இந்த இணைய தளத்தில் உருவாக்கிட முக்கியப் பங்காற்றிய மாணவர் அணி தொழில்நுட்ப பிரிவினராகிய என்.நவீன், எஸ். சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 1 1 
  

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads