Pages

Saturday, 2 June 2012

40 வயதை கடந்தவர்களுக்கான சரும பாதுகாப்பு!

நாற்பது வயதை கடந்ததும் லேசாக நரையும்,ஆங்காங்கே சுருக்கமும் எட்டிப்பார்க்கும். அதிலிருந்து எப்படி பாதுகாப்பு பெறுவது?
வீட்டிலேயே கிடைக்கும் பழங்கள், காய்கறிகளைக் கொண்டு பேஷியல் செய்து கொள்ளலாம். அதிகப்படியான மேக் அப் போடுவதை தவிருங்கள். இதுதான் சுருக்கம் ஏற்பட முதற்காரணம். அடிப்படையில் போடக்கூடிய சாதாரண மேக் அப் போட்டாலே போதும். இயற்கை அழகும் கூடுதலாய் அழகை எடுத்துக்காட்டும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் சரும சுருக்கத்தை தவிர்க்கலாம். காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். அதேபோல் யோகர்டு, சாக்லேட், உலர்பழங்கள், கிரீன் டீ, சோயா தயாரிப்பு உணவுகளை உண்ணலாம். ரெட் ஒயின் சாப்பிடுங்கள் அது உங்களின் இளமையை தக்கவைக்கும்.
சரியான அளவு தண்ணீர் குடியுங்கள், நல்ல உறக்கம் கண்ணிற்கு கீழே கருவளையம் ஏற்படாமல் தடுக்கும். எதற்கும் கவலைப்படாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் முகத்தில் கூடுதல் அழகு அதிகரிக்கும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள். உங்களுக்கு வயதான தோற்றமே ஏற்படாது. நாற்பதை கடந்த அன்னையரே! அன்னையர் தினத்தில் தோற்றத்தை மாற்றுங்கள் உங்களின் அழகை அதிகரியுங்கள்…!

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads