- ரஷ்யாவில் நடந்த உலக செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். ஆனந்துக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
- உலக செஸ் போட்டியில் 5வது முறையாக பட்டம் பெற்ற ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
- ஆனந்தை பாராட்டும் வகையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ.10 லட்சம் வழங்கும் என்று விளையாட்டு மந்திரி அஜய் மேகன் அறிவித்து உள்ளார்.
- இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடி தந்த செஸ் உலகின் ராஜா என்று அழைக்கப்படும் ஆனந்த் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
- ஆனந்துக்கு அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆனந்தை வரவேற்க ஏராளமானோர் விமான நிலையத்துக்கு திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதுகுறித்து, அகில இந்திய செஸ் சம்மேளனத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. கூறும்போது, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக கைப்பற்றிய ஆனந்துக்கு சென்னை விமான நிலையத்தில் மிக சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- செஸ் விளையாட்டுக்கு அதிக உதவியும், ஊக்கமும் அளித்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஆனந்த் சென்னை திரும்பியதும் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதன்பின்னர் ஆனந்துக்கு பாராட்டு விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
Saturday, 2 June 2012
ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசு: ஜெயலலிதா
Labels:
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
ADVERTISE HERE.
space for ads

No comments:
Post a Comment