பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகான் இருவரும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்தனர். 'சயிபீனா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த ஜோடியின் திருமணம் எப்போது நடக்குமென்பதை இந்தி சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சயீப்பும், கரீனாவும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்தனர்
.
இந்நிலையில் கரீனா கபூர்-சயீப் அலிகான் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி, பட்டோடியில் நடைபெற உள்ளதாக சயீப்-ன் சகோதரி இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கரீனாவும், சயீப்பும் நடித்து வந்த 'ஏஜெண்ட் வினோத்’ பட ரிலீசுக்குப் பின்னர், இவ்வருட துவக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். ஆனால் படம் வெளியான பின்னும் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. ஆனால் தற்போது அவர்கள் திருமணம் பற்றிய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
41 வயதான சயீப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மகனான சயீப்புக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கரீனாவும் இதற்கு முன்னர் நடிகர் ஷாகித் கபூரை மூன்றாண்டுகளாகக் காதலித்து, பின்னர் அவரைப் பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment