தெட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
தன்னிலை உதித்துத் தன்னிலே ஒடுங்கும்
சருவமும் தான் அதன் சான்று
முன்னிய விழிப்பு கனவோடு துயிலாம்
மூன்(று) எனும் மூவிரல் நீங்கில்
அன்னிய சுட்டு விரல் எனும் ஜீவன்
அங்குட்ட சிவத்தொ(டு) ஒன்(று) எனவே
சன்னதி மௌனக் குறிப்பினால் உணர்த்தும்
தெட்சிணாமூர்த்தி தான் வழி.
No comments:
Post a Comment