பைரவரை வழிபட்டால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் வல்லமையுடையவர். இவரைத் துதிப்பவர்கள் தூய சைவ உணவுப் பழக்கம் உடையவராய் இருக்க வேண்டும்.
தினமும் குளித்து பக்தியுடனும், ஆச்சாரத்துடனும் பைரவருக்குரிய பைரவாஷ்டக ஸ்தோத்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். புறத்தூய்மையுடன் அகத்தூய்மையும் மிக அவசியம். தொடர்ந்து 48 நாட்கள் தடையின்றி நம்பிக்கையோடு ஸ்தோத்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். ஸ்தோத்திரங்களை பிழையின்றி, சரியாக உச்சரிக்க வேண்டும்.
நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்க்கால பைரவரை செவ்வரவளிப் பூவால் 9 வாரங்கள் ஸகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி நாளில் மாலை வேளையில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்ரமோ அல்லது ஸகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமி நாட்களில் தொடர்ந்து வழிபட வேண்டும்.
இழந்த சொத்தை மீண்டும் பெற 11 அஷ்டமி திதிக்களில் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் (மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லது நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவதே பைரவ தீபமாகும்.) சனி தோஷம் அகல பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத் தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும். பகைவர் பயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு 8 கிழமைகள் செய்தால் தொழில் நஷ்டம் அகலும், தொல்லைகள் நீங்கும். தீராத நோய்கள் நீங்க பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள தீராத நோயும் தீரும். செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும்.
அவ்வாறு அர்சித்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைக்க செல்வம் கொழிக்கும். காலையில் 8 மணிக்குள் காவிரியில் நீராடி 10.30 மணிக்குள் ஸ்ரீ கால பைரவரைச் தரிசிப்பவர்களுக்கு காசியின் எல்லாப் புண்ணியங்களும் ஒருசேரக் கிடைக்குமாம்.
அதுமட்டுமல்ல, கொடியவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், தோசம் யாவும் அன்றைய தினமே நீங்கி இன்பம் கிட்டுமாம். மழலைச் செல்வம் வேண்டுவோர் 16 ஞாயிற்றுக்கிழமை நீராடி ஸ்ரீ கால பைரவரை வழிபட்டால் கை மேல் பலன் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment