கால பைரவர் மனிதனின் ஆயுள் முழுவதும் நான்கு நிலைகளில் இந்தப் பிரிவில் உள்ள வயதின் அடிப்படையில் உள்ள நன்மைகளை, தீமைகளைக் கொடுக்கும், தீர்க்கும் பைரவரைக் குறிக்கும். அவர் யுகத்திற்கு ஒரு பைரவராக நான்கு பைரவராக காட்சி தருகிறார்.
திருவாச்சி கோலத்தில் காட்சி அளிப்பதால் வளர்பிறை அஷ்டமியில் வழிபட்டால் பொருளாதாரம், தொழில் விருத்தி ஆகும். தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் உடல்நிலை நலிவு, குடும்ப கஷ்டம், தீவினை, திருஷ்டி அகலும்.
ஸ்ரீ பைரவரை 8 ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து ராகு காலத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபட இழந்த, பொன் பொருள் கிடைக்கும். முதலில் நம்முடைய வயதில் 30க்குள் ஞான காலபைரவர், படிப்பு, உத்தியோகம், நல்இல்வாழ்க்கை அளிப்பவர்.
இரண்டாம் நிலையில் நம்முடைய வயது 30-க்கு மேல் 60 வயதிற்குள் (திருவாச்சி கோலத்தில் உள்ளவர்) சுவர்ணாகர்ஷண பைரவர். வியாபாரம், தொழில் அபிவிருத்தியை அள்ளித் தந்து குடும்ப சேமத்தைத் தருபவர். நம்முடைய 60 வயதிற்கு மேல் 90 வயதிற்குள் உன்மத்த பைரவர்.
No comments:
Post a Comment