Pages

Thursday, 17 October 2013

பெற்றோர் செய்கின்ற பெரிய தவறு.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பது. இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள். கல்லுரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்தவதற்குத் தடை செய்துள்ளனர்.
செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.
1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம், அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுக்காக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
3. SMS (Short Message Service) என்பது இப்போது Sex Message Service ஆக மாறி விட்டது அந்த அளவுக்கு ஆபாச செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.
4. தங்கு தடையற்ற காதல் பேச்சுகள்: எந்த ஓர் ஆணும் பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதை தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுச்சுளைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads