Pages

Wednesday 5 June 2013

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு.

     
 சென்னை அண்ணா பல்கலைகழகம் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர இந்த ஆண்டு 1.89 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேண்டம் எண் என்பது பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை என்பதை தெரிந்து கொள்ள வெளியிடப்படும் ஒன்றாகும். ரேண்டம் எண்ணானது விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலம் ஒதுக்கப்படும் எண் ஆகும். ரேண்டம் எண் மதிப்பு அதிகமாக உள்ள மாணவர்கள் கலந்தாய்விற்கு முதலில் அழைக்கப்படுவார்கள். பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 17ம் தேதி முதல் துவங்குகிறது.

பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடப்பதை அடுத்து, ஒரே மதிப்பெண் பெற்றவர்கள் இடையே மூத்தவரை அடையாளம் காண்பதற்கான ரேண்டம் எண்கள் இன்று காலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டது.  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் இடங்கள் உள்ளன. அவற்றில் தகுதியுள்ள மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையின் கீழ் சேர்க்கப்பட உள்ளனர். பொறியியல் படிப்பில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வந்துள்ளன. பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் கணக்கிட்டு அதற்கான பட்டியல் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவர்களில் பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ரேங்க் பட்டியல் தயாரிக்கும்போது ஒரே மதிப்பெண் பெற்றவர்களில் சீனியர் யார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சீனியரை அடையாளம் காண்பதற்காக ரேண்டம் எண்கள் முன்னதாக வழங்கப்படும்.

ஒரே மதிப்பெண் பெற்றுள்ளவர்களில் பிறந்த தேதி, பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருப்பது, மொத்த மதிப்பெண் பெற்றதில் முதலிடம் பெற்றிருப்பது உள்ளிட்ட விவரங்களை கொண்டு அதில் யார் மூத்தவர்(சீனியர்) என்று கணக்கிட்டு பட்டியலில் அவர் முதலில் இடம் பெறுவார். இதற்காக ரேண்டம் எண் வழங்கப்படும். அந்த எண்கள் வழங்குவதில் தொடக்க எண்கள் இன்று தேர்வு செய்ப்படும்.

அப்படி தேர்வு செய்யப்படும் 10 இலக்க எண்ணை ரேண்டம் பட்டியலின் முதல் எண்ணாக கொண்டு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சீரியலாக எண்கள் வழங்கப்படும். இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் இந்த ரேண்டம் எண்கள் வெளியானது.
For  viewing number click link below;
http://www.annauniv.edu/tnea2013

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads