Pages

Wednesday 5 June 2013

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் வழக்கு தொடர முடியாது

        இனி வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால், நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. அதற்கு பதில் சமரச மையங்கள், லோக் அதாலத் மூலமே தீர்வு காணும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 30 சதவீத வழக்குகள், செக் மோசடி மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராத வழக்குகளாகவே உள்ளன. இதனால், பிற வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது, வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால், பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அது குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரலாம். இது போன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் ஏராளமாக தேங்கிக் கிடக்கின்றன.இந்த வழக்குகளை கட்டுப்படுத்த அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஆலோசனை நடத்தி, ஒரு பரிந்துரை அளித்துள்ளது. அதாவது, செக் மோசடி மற்றும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் தொடர்பான வழக்குகளை இனி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யக் கூடாது. அவற்றை சமரச மையம், லோக் அதாலத், நடுவர் மன்றங்கள் ஆகியவற்றில் மட்டுமே தீர்வு காண செய்யலாம் என்று கூறியுள்ளது. இதற்காக புதிய சட்ட மசோதாவை கொண்டு வரலாம் என்றும் தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, மத்திய சட்டம் அமைச்சகம், புதிய சட்ட மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இச்சட்டம் அமலுக்கு வந்தால், செக் மோசடி வழக்குகளை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல முடியாது. லோக் அதாலத் மூலமே தீர்த்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads