Pages

Saturday 25 May 2013

நவரத்தின -கற்களும் அவற்றின் பலன்களும்.


நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
      மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
     இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;
மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,
முத்து (pearl)

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads