Pages

Thursday, 11 April 2013

புற்றுநோயைத் தடுக்கும் காய்கள்.

வெள்ளை நிறம் கொண்ட காய்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள்  உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
காலிஃபிளவர் :

காலிஃபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.  காலிஃப்ளவர் வைட்டமின் சத்து நிறைந்தது. இதில்  உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன.

உருளைக்கிழங்கு, வாழைப்பழம்:



 உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில்  கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.
காளான்கள்:

 உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பூஞ்சை இன காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. காளான்களில்  அதிக புரதம் காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து  நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர்.



வெள்ளைப்பூண்டு:

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள  கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.






டர்னிப்: 

டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இதை  பச்சையாக சாலட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம்  அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads