துலாம்: மற்றவர்களை உயர்வாக நினைக்கும் நீங்கள், சில நேரங்களில் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வீர்கள். மொழியுணர்வு அதிகமுள் ளவர்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் மகிழ்ச்சி தங்கும். அவர் பிப்ரவரி 22ந் தேதி முதல் 5ல் நுழைவதால் மனப் போராட்டங்கள் ஓயும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆனால், ராசிநாதன் சுக்கிரனுடன், சூரியனும், செவ்வாயும் நிற்ப தால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடிக்கு அலைச்சல் இருக்கும். என்றாலும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் அனைத்து இடர்பாடுகளையும் கடக்கும் சக்தி உண்டாகும்.
இந்த மாதம் பிறக்கும்போது சூரியன், செவ்வாய், புதன் ஆகிய கோள்கள் நிற்பதால் பிள்ளைகளின் ஆரோக்யத்தில் இந்த மாதம் முழுக்க கூடுதல் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக 1ந் தேதி வரை அவர்களுக்கு சளித் தொந்தரவு, வயிற்று வலி, தலை வலி வரக்கூடும். உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வழக் கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 6ல் மறைவதால் பிள்ளைகளின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ஆனால், மனைவிக்குரிய கிரகமும் சப்தமாதிபதியுமான செவ்வாய் 6ல் அமர்வதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். மனைவிவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். 8ல் குரு தொடர்வதால் சில நேரங் களில் தைரியம் குறையும். தன்னைப்பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்களே! மதிப்பு, மரியாதை குறைந்து விடுமோ! வேறு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்றெல்லாம் அச்சப்படுவீர்கள். ஆனால், குரு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பிரச்னைகளெல்லாம் தீரும். பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கும். ஜென்மச் சனி நடைபெறுவதால் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை வரும். அவற்றை யெல்லாம் யோகா, தியானம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். நேரம் கிடைத்தால் குலதெய்வத்தை வணங்கி வருவது நல்லது. ராசியிலே ராகு நிற்பதால் ஆடம்பரமாக, அலங்காரமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர் வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். மாணவர்களே! மந்தம், மறதி வந்து நீங் கும். நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு, சலுகை திட்டங்களை அறிவித்து பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். விவசாயிகளே! பக்கத்து நிலக்கார ருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். செலவினங்களோடு அலைச்சல் இருந்தாலும் அதிரடி முன்னேற்றங்கள் தரும் மாதமிது. ராசியான தேதிகபிப்ரவரி 13, 14, 15, 16, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 6, 7, 8, 13 சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 17ந் தேதி மாலை 5 மணி முதல் 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை சஷ்டி திதியன்று தரிசித்து வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.
விருச்சிகம்: விவரமாகவும், விரிவாகவும் பேசும் நீங்கள் இனஉணர்வு அதிகம் உள்ளவர்கள். சீர்திருத்த சிந்தனை கொண்ட நீங்கள், எதிர்ப்புகளை கண்டு அஞ் சாதவர்கள். உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏழரைச்சனியால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் குறையும். நல்லவர் களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்களுக்கு உதவுவீர்கள். அவர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பீர்கள். ராசிக்கு 6ல் கேது தொடர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.
உங்களின் புகழ், கௌரவம் உயரும். வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். யோகா, தியானத்தில் ஆர் வம் பிறக்கும். சித்தர் பீடங்களின் தொடர்பும் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால் பணவரவு உண்டு. சுபச் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை அமையும். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். தந்தைவழி சொத்தும் வந்து சேரும். தந்தை வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அரசாங்க காரியங்கள் உடனடியாக முடியும். வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 5ம் வீட்டில் அமர்வதால் பூர்வீகச் சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வரக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். புதன் வலுவாக காணப்படுவதால் வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஏழரைச்சனி நடைபெறுவதால் நயமாகப் பேசுகிறார்கள் என்று அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லிக் கொண் டிருக்காதீர்கள். ரகசியங்கள் ரகசியமாகவே இருப்பது நல்லது. அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவர்களே! விளையாட்டில் பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. சம்பள பாக்கியும் கைக்கு வந்து சேரும். எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் கிட்டும். திடீர் முன்னேற்றம் உண்டு. சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலையும் கிடைக்கும். கலைத்துறையினரே! பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். விவசாயிகளே! பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். நெல், மஞ்சள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் மாதமிது. ராசியான தேதிகள்: பிப்ரவரி 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28 மார்ச் 1, 7, 8, 9, 10, 11 சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 20, 21 மற்றும் 22ந் தேதி மாலை 4 மணி வரை யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பரிகாரம்: வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள தகட்டூர் காசி பைரவரை தரிசித்துவிட்டு வாருங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுங்கள்.
தனுசு: தர்மம் தலைகாக்கும் என்பதை அறிந்த நீங்கள் நெருக்கடி நேரத்தில் பிறருக்கு உதவுவீர்கள். விவாதம் என வந்து விட்டால் விட்டுக் கொடுக்க மாட் டீர்கள். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் வேகமாகவும், காரமாகவும் பேச வைத்த சூரியன் இப்போது 3ல் நுழைந்திருப்பதால் உங்களின் புதிய முயற்சிகள் யாவையும் வெற்றி பெற வைப்பார். தடைகளெல்லாம் நீங்கும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இ ருப்பவர்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். அவர்கள் மூலமாக கடினமான காரியங்களையும் நீங்கள் முடித் துக் காட்டுவீர்கள். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
தந்தையாருடன் இருந்த பிணக்குகள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதன் மூலம் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மகனுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். சொத் துப் பிரச்னையும் சாதகமாக முடிவடையும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பணத் தட்டுப்பாடு இருந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 3ல் சென்று மறைவதால் ஒரு வகையில் உங்களுக்கு நல்லது. 5ல் கேது நி ன்று சனி பார்த்துக் கொண்டேயிருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு முறைகளை அமைத்துக் கொள்ளுங்கள். ராசிநாதனான குரு 6ல் மறைந்திருப்பதால் மற்றவர்கள் தன்னைப்பற்றி தரக் குறைவாக நினைக்கிறார் களே! என்ற அச்சமெல்லாம் இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! புதிய திட்டங்கள் நிறைவேறும். கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். தோற்றப் பொலிவு கூடும். பள்ளி மற்றும் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியர், பெற்றோரின் ஆதரவால் முன்னேறுவீர்கள். சனியும், ராகுவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் வியாபாரத்தில் புது வழி கிடைக்கும். பங்குதாரரை மாற்றுவீர்கள். திடீர் லாபம் உண்டு. வராது என்றிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சியில் இறங்குவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கௌரவப் பிரச்னை, ஈகோ பிரச்னைகள் நீங்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! நழுவிச் சென்ற வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறுவதுடன் அந்தஸ்தும் ஒருபடி உயரும். மாதமிது. ராசியான தேதிகள்: பிப்ரவரி 19, 20, 21, 25, 26, 27, 28 மார்ச் 1, 2, 3, 9, 10, 11 சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 22ந் தேதி மாலை 4 மணி முதல் 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டியது வரும். பரிகாரம்: அருகிலுள்ள சிவாலய துர்க்கையை தரிசனம் செய்து வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.
|
Tuesday, 12 February 2013
மாசி மாத ராசி பலன்கள் -( 13.2.2013 முதல் 13.3.2013 வரை ).
Labels:
ஜோதிடம்
Subscribe to:
Post Comments (Atom)
ADVERTISE HERE.
space for ads
No comments:
Post a Comment