Pages

Tuesday, 12 February 2013

மாசி மாத ராசி பலன்கள் - ( 13.2.2013 முதல் 13.3.2013 வரை ) .

மேஷம்: புரட்சிகரமான சிந்தனையை உடைய நீங்கள், எல்லோரும் எல்லாம் பெற வேண்டுமென்று நினைப்பீர்கள். பிறர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள்.  உங்கள் ராசிநாதனான செவ்வாய் மார்ச் 1ந் தேதி வரை லாப வீட்டிலேயே வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சவாலான காரி யங்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பொறுப்புகள், கௌரவப்  பதவிகள் கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆனால் மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 12ல் மறைவதால் கொஞ்சம் அலைச்சல், சோர்வு, களை ப்பு, முதுகு வலி வந்துபோகும். 

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூ டும். இரும்புச் சத்து உடலில் குறையும். எனவே காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இந்த  மாதம் முழுக்க லாப வீட்டிலேயே நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகனுக்கு ந ல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் ஆரோக்யம் சீராகும். பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 11ம் வீட்டில் அமர்வதால் மனைவிவழியில்  உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நண்பர்கள் உங்கள் தேவை யறிந்து உதவுவார்கள். 

பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். பிரபல யோகாதிபதியான குருபகவான் 2ம் வீட்டிலேயே நீடிப்ப தால் சாதூர்யமாகப் பேசி சில முக்கிய காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆனாலும், ராசிக்குள்ளேயே கேது  நிற்பதால் முன்கோபப்படுவீர்கள். கோபத்தை குறைக்க யோகா, தியானம் என மனப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. ராகுவும், சனியும் 7ம் வீட் டிலேயே தொடர்வதால் கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள். 
அரசியல்வாதிகளே! கட்சியின் மேலிடத்தில் உங்களின் கோரிக்கையை ஏற்பார்கள். 
மாணவர்களே! மதிப்பெண் கூடும். 
கன்னிப்பெண்களே! எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும்.  
  வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை விரிவுபடுத்துவது, சீர்படுத்துவது போன்ற முயற்சிகளும் வெற்றியடையும். அனுபவமுள்ள  வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். 

உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். குறிப்பாக 22ந் தேதி முதல் நிம்மதி உண்டு. அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சம்பளப் பாக்கி தொகையும் கைக்கு வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 
கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 
விவசாயிகளே! மாற்றுப் பயிரிட்டு வருமானத்தை பெருக்குவீர்கள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்: 
பிப்ரவரி 19, 20, 22, 27, 28 மார்ச் 1, 2, 8, 9, 10
சந்திராஷ்டம தினங்கள்: 
மார்ச் 3ந் தேதி மாலை 4.30 மணி முதல் 4 மற்றும் 5ந் தேதி மாலை 6 மணி வரை திட்டமிட்ட பணிகள் தாமதமாக முடியும்.
பரிகாரம்: 
சென்னை - சோழிங்கநல்லூர் பிரத்யங்கரா ஆலயத்தில் வீற்றிருக்கும் நீலசரஸ்வதியை வணங்கி வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

ரிஷபம்: மற்றவர்கள் செய்த கெடுதல்களை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.  முக்கிய கிரகங்கள் எல்லாமே இந்த மாதத்தில் சாதகமாக இருப்பதால் நீண்ட நெடு நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலைகள் சிறப்பாக முடியும். எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கூடும். பழைய கடன் பிரச்னையில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். இந்த மாதம் முழுக்க உற்சா கமாக காணப்படுவீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சூரியன், புதன் இருவரும் சாதகமாக இருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பது  நல்ல விதத்தில் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். 

அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சாதக மாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பணப்புழக்கம்  அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சனியும், ராகுவும்  வலுவாக காணப்படுவதால் கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனதில் இடம்  பிடிப்பீர்கள். பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். 

என்றாலும் ராசிக்கு 12ல் கேது நிற்பதால்  வேலைச்சுமை, அலைச்சலால் அவ்வப்போது தூக்கம் குறையும். புண்ணிய தலங்களிலிருந்து பிரசாதங்கள் வரும். வழிபாட்டுத் தலங்களில் முதல் மரி யாதை கிடைக்கும். ராசிக்குள்ளேயே குரு நீடிப்பதால் இனந்தெரியாத மனக்கவலை, பயம், திடீர் திடீரென்று உணர்ச்சி வசப்படுதல் என்றெல்லாம் இ ருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிமானக் கோளாறு வரக்கூடும். உணவு விஷயத்தில் கட் டுப்பாடு அவசியம். 
அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். 

கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். 
மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.   
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். துரித உணவு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள். 
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 
கலைத்துறையினரே! உங்களின் படைப்புத்திறன் வளரும். 
விவசாயிகளே! அடகிலிருக்கும் பத்திரங்களை மீட்க உதவிகள் கிட்டும். எதிர்பார்த்த அரசு சலுகைகளும் கிடைக்கும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: 
பிப்ரவரி 13, 14, 16, 20, 21, 22, 23, 24 மார்ச் 2, 3, 4, 10, 11, 13
சந்திராஷ்டம தினங்கள்: 
மார்ச் 5ந் தேதி மாலை 6 மணி முதல் 6 மற்றும் 7 ஆகிய தினங்களில் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.  
பரிகாரம்: 
கடலூருக்கு அருகேயுள்ள திருவஹிந்திரபுரம் தலத்தில் அருளும் ஹயக்ரீவரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை  ஏற்றுக் கொள்ளுங்கள்.

மிதுனம்: திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல. அதை நிறைவேற்றுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள்தான். உங்களின்  பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரன் பிப்ரவரி 22ந் தேதி முதல் 9ம் வீட்டில் அமர்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீடு கட்ட, வாங்க, வங் கிக் கடன் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டுக்களை பெறுவார்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிதுர்காரகன் சூரியன் இப்போது 9ம் வீடான பிதுர் ஸ்தானத்திலேயே அமர்வதால் தந்தையாருக்கு லேசாக உடல்நிலை பாதிக்கும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். செவ்வாயும் 9ம் வீட்டில் தொடர்வதால் கொஞ்சம் சேமிப்புகள் கரையும். கைமாற்றாகவும் பணம் வாங்க வேண்டியது வரும். ஆனால், மார்ச் 2ந் தேதி முதல் செவ்வாய் 10ல் நுழைவதால் தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் குறையக்கூடும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிநாதனான புதன் 1ந் தேதி வரை பலவீனமாக இருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், சரியான தூக்கமின்மையால் கண் எரிச்சல் வர வாய்ப்பிருக்கிறது.

குரு 12ல் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகளும் கூடிக் கொண்டே போகும். நல்லவர்கள், நீண்டகால நண்பர்களுடன் சிறுசிறு விவாதங்கள் வந்துபோகும். சனியும், ராகுவும் 5ம் வீட்டிலேயே தொடர்வதால் மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர்  இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும். அடிவயிற்றில்  வலிவரக்கூடும். தண் ணீர் அதிகமாக குடியுங்கள்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.
கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். 

மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.
கேது லாப வீட்டில் நிற்பதால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பங்குதாரருடன் இருந்த மோதல்களும் விலகும். வாகன உதிரி பாகங்கள், பூ, ஸ்டேஷனரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் 
வருவார்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள்.
2ந் தேதி முதல் செவ்வாய் 10ல் அமர்வதால் உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ஆனால், உங்களுக்கு சத்ரு ஸ்தானத்திற்குரியவராகவும் செவ்வாய் வருவதால் மறைமுக எதிர்ப்புகளும்  வந்துபோகும். 
கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 
விவசாயிகளே! அயராத உழைப்புக்கேற்ற பலன் கிடைக் கும். முற்பகுதி அலைச்சலை தந்தாலும் பிற்பகுதியில் அதிரடி முன்னேற்றம் தரும் மாதமிது.  
ராசியான தேதிகள்: 
பிப்ரவரி 13, 14, 15, 16, 23, 24, 25, 26, 27 மார்ச் 4, 5, 6, 7, 13
சந்திராஷ்டம தினங்கள்: 
மார்ச் 8, 9 ஆகிய நாட்களில் மனதில் இனம்புரியாத பயம் வரக்கூடும்.
பரிகாரம்: 
கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் ஆலயத்தில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கும் அஷ்டபுஜ காளியை தரிசித்து விட்டு வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

கடகம்: அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனைக்கு எல்லையில்லை என்பதை அறிந்தவர்கள் நீங்கள்தான். கடந்த ஒரு மாத காலமாக உங்கள் ராசிக்கு 8ம்  வீட்டிலேயே நின்றுகொண்டு உங்களை பாடாய்ப்படுத்தி, உங்களின் கையிருப்புகளையும் கரைத்ததுடன், கோபப்படுத்தி வேகமாக பேச வைத்துக்  கொண்டிருக்கும் செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 9ல் நுழைவதால் மனஉளைச்சல் நீங்கும். சாத்வீகமான எண்ணங்கள் வரும். பழைய பிரச்னையை  மாறுபட்ட கோணத்தில் யோசித்து புதுத்தீர்வு காண வழி கிடைக்கும். பல வி.ஐ.பிகளை தெரிந்து வைத்திருந்தும் உங்களுக்கு அவசர நேரத்தில்  யாரும் உதவ முன்வராமலிருந்தார்கள் அல்லவா! அந்த நிலை மாறும்.

சகோதர சகோதரிகள் உங்களிடமிருக்கும் நல்ல குணங்கள், உதவும் மனப் பான்மை இவற்றையெல்லாம் மறந்து விட்டு சின்னச் சின்ன குறைகளை பெரிதுபடுத்தி பேசினார்களே! இனி அவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இ ருப்பார்கள். சொத்து, பூமி சம்பந்தப்பட்ட வழக்கிலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். என்றாலும் தந்தையாருடன் மோதல்கள் வரக்கூடும். அவரின் ஆரோக் யத்தில் அக்கறை காட்டுங்கள். ராசிக்கு 7ல் அமர்ந்துகொண்டு மனைவிக்கு தொந்தரவுகளை தந்து கொண்டிருந்த சூரியன் இப்போது 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி நீங்கும். மனைவியோடு நிலவிய கருத்து வேறுபாடுகளும் விலகும்.

புதன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ஷேர் மார்க்கெட்டில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம். புண்ணிய  தலங்கள் சென்று வருவீர்கள். மார்ச் 2ந் தேதி முதல் பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு உயர்கல்வியிலும் ஆர்வம் உண் டாகும். குரு லாப வீட்டிலேயே தொடர்வதால் உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். சுக ஸ்தானத் தில் சனியும், ராகுவும் நிற்பதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து டென்ஷனாக வேண்டாம். அவற்றையெல்லாம் மறப்பது நல்லது. தாயா ருக்கு சளித் தொந்தரவு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீங்கும்.

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேச வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ப  நல்ல வரன் அமையும். 
மாணவர்களே! மதிப்பெண் உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். 
வியாபாரத்தில் மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். நயமாகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். எலக்ட்ரிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன், உணவு வகைகளில் கணிசமாக லாபம் கூடும். 
10ல் கேது இருப்பதால் உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்கள் உதவுவார்கள். 
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். 
விவசாயிகளே! புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். கரும்பு, சவுக்கு, தேக்கு வகைகளால் லாபமடைவீர்கள். இங்கிதமாகப் பேசி சாதிக்கும் மாதமிது.   
ராசியான தேதிகள்: 
பிப்ரவரி 15, 16, 17, 18, 19, 25, 26, 27, 28 மார்ச் 1, 6, 7, 8
சந்திராஷ்டம தினங்கள்: 
மார்ச் 10, 11 ஆகிய தினங்களில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 
பரிகாரம்: 
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ராகவேந்திரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவுங்கள்.
சிம்மம்: நெருக்கடி நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்காமல் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்தவர்களே! பிப்ர வரி 21ந் தேதி வரை 6ம் வீட்டிலேயே சுக்கிரன் மறைந்திருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங் கள் வரும். சமையலறை சாதனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். சாலை விதிகளை மீறாமல் வாகனத்தை  இயக்குங்கள். பிப்ரவரி 22ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும்.

காது வலி, முதுகு  வலி, படபடப்பு, விபத்துகள் குறையும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்கும் வாய்ப்பு  உண்டாகும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த மகளின் திருமணம் நல்ல வரன் வந்து முடியும். மகனுக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும். உங்கள்  ராசிநாதனான சூரியன் 7ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் தைரியம் கூடும். சவாலான காரியங்களைக்கூட கையில் எடுத்து  முடிக்கத் துணிவீர்கள். ஆனாலும் கண் எரிச்சல், உஷ்ணத்தால் வேனல் கட்டி, தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துபோகும்.

இந்த மாதம் புதன்  சாதகமாக இருப்பதால் சொந்த-பந்தங்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் மார்ச் 2ந் தேதி முதல் 8ல் சென்று மறைவதால் அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். இரண்டு, மூன்று வேலைகளை ஒரேநாளில் பார்க்க வேண்டியது வரும். 3ல் சனியும், ராகுவும் நீடிப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை யெல்லாம் நிறைவேற்றுவீர்கள். எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். 
மாணவர்களே! படித்தால்  மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். 
வியாபாரத்தில் ஒரளவு லாபம் உண்டு. பழைய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டியது வரும். 22ந் தேதி முதல் புது வாடிக்கையாளர்கள்  அறிமுகமாவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். ஆனால், 2ந் தேதி முதல் போட்டிகள் அதிகரிக்கும். தொழில் ரகசியங்களை வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 

உத்யோகத்தில் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார்.
கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். 
விவசாயிகளே!  மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். கிணற்றில் ஊற்றுநீர் சுரக்கும். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: 
பிப்ரவரி 20, 21, 22, 27, 28 மார்ச் 1, 2, 3, 8, 9, 10, 11
சந்திராஷ்டம தினங்கள்: 
பிப்ரவரி 13, 14 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய நாட்களில் அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரம்: 
தஞ்சை பூமால் ராவுத்தர் வீதியிலுள்ள நிசும்பசூதனி ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். வயதானவர்களுக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.
கன்னி: சில நேரங்களில் சிரித்துப் பேசினாலும் பல நேரங்களில் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லுபவர்களே! கடந்த ஒரு மாதகாலமாக உங்கள்  ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து கொண்டு மனக்குழப்பங்களையும், பிள்ளைகளுடன் கருத்து மோதல்களையும், உறவினர்களால் செலவுகளையும்,  அலைச்சலையும் கொடுத்த சூரியன் இப்போது 6ல் அமர்ந்திருக்கிறார். 12ம் வீட்டிற்குரிய சூரியன் 6ல் அமர்வது விபரீத ராஜயோகத்தை தரக்கூடிய அமைப்பாகும். இந்த மாதம் முழுக்க சூரியன் 6ல் நிற்பதால் எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். 
அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டி கடனைப் பெற்று பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகத் திரும்பும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பிப்ரவரி 21ந் தேதி வரை 5ம் வீட்டிலேயே யோகாதிபதியான சுக்கிரன் அமர்ந்திருப்பதால் பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பிப்ரவரி 22ந் தேதி முதல் 6ல் சென்று சுக்கிரன் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடிக்கு செலவுகள் இருக்கும். ஆனால், மார்ச் 2ந் தேதி முதல் 7ல் நுழைந்து உங்கள் ராசியை பார்க்க இருப்ப தால் உடல் உஷ்ணம் அதிகமாகும். 

கார உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சகோதர, சகோதரிகளால் நல்லது நடக்கும். உங்கள் ராசிநாத னான புதன் 6ல் நிற்பதால் சளித் தொந்தரவு, வீசிங் பிரச்னை, நெருங்கிய உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். பாதச் சனி தொடர் வதால் கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழித்து எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். பல்லில் ஈறு வீக்கம்  கொள்ள வாய்ப்பிருக்கிறது. குரு 9ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். பெரிய பிரச்னைகள் வருவது போல தோன்றினாலும் கடைசி நேரத்தில் குறைந்துவிடும். 

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 

கன்னிப் பெண்களே! காதல் கசக்கும்.  உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். 

மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்கத் தயக்கம் வேண்டாம்.  

வியாபாரம் மந்தமாக இருக்கும். என்றாலும் சூரியனின் பலத்தால் கொஞ்சம் சூடுபிடிக்கும். வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். அனுசரித்துப் போவது நல்லது. ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. 
உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி உங்களின் செயலை உற்று நோக்குவார். தேடிக் கொண்டிருந்த தொலைந்து போன  பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும். 

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள். 

விவசாயிகளே! தரிசு நிலங்களை யும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து காய் நகர்த்தி காரியம் சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: 

பிப்ரவரி 13, 14, 20, 21, 22, 23, 24, 25, 26 மார்ச் 4, 5, 7, 8, 13

சந்திராஷ்டம தினங்கள்: 

பிப்ரவரி 15, 16 மற்றும் 17ந் தேதி மாலை 5 மணி வரை எதிலும் பொறுமை காப்பது நல்லது.

பரிகாரம்

சீர்காழிக்கு அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதரையும், தையல்நாயகியையும், முத்துக்குமாரசுவாமியையும் தரிசி த்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு பானகம் கொடுங்கள்.


No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads