Pages

Wednesday 10 October 2012

கோவைக்காய்-நீரிழிவை நோயை கட்டுப்படுத்த உதவும் !!!


இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறைகள் மற்றும் பரம்பரை இவற்றால் உண்டாகும் வியாதி நீரிழிவு. இந்த வியாதி நெடுங்காலமாக, ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்களை பாதித்து வரும் நோய். இவ்வளவு நாட்கள் இருந்தும், நீரிழிவுக்கு முழு நிவாரணம் இல்லை. எனவே மாற்று மருத்துவ முறைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இயற்கை மூலிகைகள், தாவரங்கள்
இவைகள் நீரிழிவு வியாதியை குணப்படுத்த முடியுமா என்பது தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. பாகல்காய், வெந்தயம் இவைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
கோவைக்காய் வற்றல்:
தேவையானவை:
கோவைக்காய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு தூள் - தேவையான அளவு
புளித்த மோர் வற்றல் - மூழ்கி ஊறும் அளவு
மிளகு பொடி - தேவையான அளவு
செய்முறை:
கோவைக்காயை பறித்து அலசி மெலிதாக வட்டமாக அரியவும். ஒரு நாள் வெய்யிலில் காய போடவும். அன்று இரவு மோரில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுதூள் போட்டு நன்கு கலக்கி, காயை ஊறப் போடவும். இரண்டு நாள் ஊறியதும் வெய்யிலில் பாலிதீன் கவரில் காயப் போடவும். காய் தினம் காய வைத்து எடுத்து இரவில் உப்பு, மஞ்சள், மிளகு பொடி கலந்துள்ள மோரில் போட்டு கிளறிவிடவும். இது போன்று மோர் சுண்டும் வரை போட்டு காய வைக்கவும். நன்கு ஈரமின்றி காய் காய்ந்ததும் எடுத்து இரண்டு நான்கு மாதங்கள் கழித்து வறுத்து தொட்டுக் கொள்ளவும். இந்த வற்றலை குழம்பு சாதம், மோர் சாதம் எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

2 comments:

  1. கோவைக்காய் வற்றல் செய்து உணவல் சேர்த்துக்கொள்வது. பன்னெடுங்காலமாக தமிழனின் உணவாக பயன்பட்டு வருகிறது. நீரிழிவு நோய் வந்த.்ஏழைகளுக்கு வரப்பிரசாதமாகும்.

    ReplyDelete
  2. அன்புடன் ,

    எல்.தருமன்
    18. பட்டி.

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads