விலைவாசி ஏறிப்போனதுனால சோப்பு போட்டுக்கூட குளிக்க வேண்டாம் என்று முடிவு பண்ணியிருந்தேன்.
அம்மா (என்னுடைய அம்மா) இன்னைக்கு ஒரு இயற்கை சோப் பேஸ்ட் செய்து கொடுத்தாங்க… குளித்த பிறகு அவ்வளவு சுகம்… யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம் (விருப்பமிருந்தால்)
ஏனென்றால் இதற்கு “காப்புரிமை” எல்லாம் கிடையாது. நீங்களே அவரவர் வீட்டில் செய்து கொள்ளலாம். (குளியல் பசைக்கும் காப்புரிமை கிடையாது ..அட குளிக்கிறதுக்கும் தாங்க)
ஒருவர் நன்றாக உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிப்பதற்கு ( அவர் பலமாதாங்களாகக் குளிக்காமல் இருந்து இப்பொழுது தான் குளிக்க ஆசைப்பட்டிருக்கிறார் என்றாலும் பரவாயில்லை. இந்த செய்முறையே போதும்)
செம்பருத்தி இலை (கொஞ்சம் இளசாக இருத்தல் நல்லது) = 20 எண்ணிக்கை
வெந்தயம் = அரைத் தேக்கரண்டி ( ஊற வைத்தது)
இரண்டையும் மிக்சியில் அல்லது ஆட்டுரலில் அல்லது அம்மியில் நன்றாக அரைத்து பசை மாதிரி வழித்துக் கொள்ளவும். கொஞ்சம் சொர சொரப்பான பசையாக இருப்பது நலம்.
வாசனை வேண்டுமென்றால் கொஞ்சம் சந்தனம் அல்லது ஜவ்வாது அல்லது ரோஜா இதழ் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். (இயற்கையிலேயே மேனியில் மனம் வீசுபவர்களுக்கு இது தேவையில்லை.)
அப்புறம் பாத்ரூம் சென்று. இதுக்குமேல எங்களுக்குத் தெரியும் என்று சொல்லுகிறீர்களா..?
சரி சரி போய் குளிங்கப்பா.
இந்த செம்பருத்தி இலையும் வெந்தயமும் சேர்ந்த கலவையினைத் தேய்த்துக் குளிப்பதால், தலைமுடி மெமையாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரலாம். உடலில் உள்ள அழுக்கு நன்கு போவதால் சொரி சிரங்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேனி பொலிவும் பெறுகிறது.
பின்குறிப்பு: நான் தேய்த்துக் குளித்தேன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆரோக்கியமாக இருந்தது. இது கொஞ்சம் குளிர்ச்சியான குளியல் பசை ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆலோசனைப் படி பயன்படுத்துங்கள்.



No comments:
Post a Comment