துலாம்:
பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாயவாதிகளைக் காப்பாற்ற சில நேரங்களில் குறுக்கு வழியில் யோசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்துகொண்டு வேலைச் சுமையையும் அலைச்சலையும் தந்துக் கொண்டிருக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 28ந் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் அலைச்சல் குறையும். தீர்வு தெரியாமல் இருந்த பிரச்னைகளில் தெள்ளத் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வாகனத்தை இயக்கும் போது இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசிக்கு லாப வீட்டில் நின்று கொண்டிருந்த சூரியன் இப்போது 12ம் வீட்டில் நுழைந்திருப்பதால் மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருக்கும்.
அவர்களால் செலவினங்களும் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தப் பாருங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். தூக்கம் கொஞ்சம் குறையும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான புதன் 26ந் தேதி வரை 12ல் மறைந்திருந்தாலும் 27ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். 27ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகி 2ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கண் எரிச்சல் நீங்கும். படபடப்பும் குறையும். சகோதரர்கள் உதவுவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மனைவி உங்களின் புது முயற்சியை பாராட்டுவார். வீடு, மனை வாங்குவது, விற்பதும் லாபகரமாக அமையும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் குரு நிற்பதால் பழைய பகை நீங்கும்.
அரசியல்வாதிகளே, கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே, புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் உங்களுக்கு முழு உரிமை தருவார்கள்.
மாணவர்களே, சமயோசித புத்தியைப் பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வேலையாட்கள் உங்களை புரிந்து நடப்பார்கள். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் கோரிக்கைகளை மேலதிகாரியிடம் எடுத்துச் செல்வீர்கள்.
கலைத்துறையினரே, உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும்.
விவசாயிகளே, மகசூலை அதிகப்படுத்த நவீன ரக உரங்களை கையாளுவீர்கள். புது இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பீர்கள். பணப்பற்றாக்குறையை போராடி தீர்க்கும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 21, 22, 23, 24, 25, 26, 29, 30 அக்டோபர் 1, 3, 10, 11, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 4, 5, 6ந் தேதி மாலை 5 மணி வரை அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்:
தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள புன்னை நல்லூர் மாரியம்மனை வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள்.
விருச்சிகம்:
தடைகள் பல வந்தாலும் தளராமல் போராடி முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் நீங்கள், மற்றவர்களின் உதவியின்றி சொந்த உழைப்பால் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்து கொண்டு அலைச்சலையும் நிம்மதியற்ற போக்கையும், திடீர் செலவினங்களையும் தந்துக் கொண்டிருக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 27ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்வதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. அரைகுறையாக நின்று போன பல காரியங்கள் விரைந்து முடியும்.
அழகு, இளமை கூடும் என்றாலும் உங்கள் ராசிக்குள்ளேயே ராகு நின்று கொண்டிருப்பதால் வீண் சந்தேகத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். அவசரப்பட்டு சில வார்த்தைகள் சொல்லி அதனால் மனக்கசப்புகள் உறவினர், நண்பர்கள் மத்தியில் ஏற்படக்கூடும். அதனால் அதிரடி பேச்சுகளை குறைப்பது நல்லது. இப்போது ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும்.
பிரபல யோகாதிபதியான குருபகவான் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏழரைச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குருவின் திருவருளால் தடைபட்ட காரியங்கள் முடிவடையும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் வலுவாக அமர்ந்ததால் சிலருக்கு பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகளே, தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னிப்பெண்களே, பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ஆடை, அணிகலன் சேரும்.
மாணவர்களே, கல்யாணம், காது குத்து என்று விடுப்பு எடுக்காமல் படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் லாபம் வரும்.
உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும்.
கலைத்துறையினரே, மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களையும் கற்றுத் தெளிவீர்கள்.
விவசாயிகளே, குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீர் திருப்பங்களும், நிம்மதியும் தரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 23, 24, 25, 26, 28 அக்டோபர் 2, 3, 4, 5, 12, 13, 14.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 6ந் தேதி மாலை 5 மணி முதல் 7, 8 தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகாரம்:
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் மங்கலம்பேட்டை அருகே உள்ள முகாசாபரூரில் அமைந்துள்ள கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதியை தரிசியுங்கள். மரக்கன்றுகள் நட்டு பராமரியுங்கள்.
தனுசு:
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்டு தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கும் குணமுடைய நீங்கள், மற்றவர்கள் செய்த உதவியை ஒருபோதும் மறவாதவர்கள். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைந்திருக்கும் சுக்கிரன் 28ந் தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு குறையாது. பணப்புழக்கம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி அவர்களால் ஆதாயமடைவீர்கள். 27ந் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. உங்களின் யோகாதிபதியான சூரியன் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புது வேலை கிடைக்கும். வீடு கட்ட அனுப்பியிருந்த ப்ளான் அப்ரூவலாகும். சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செல்வாக்கு, யோகம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் 27ந் தேதி முதல் 12ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் உங்கள் பிள்ளைகள் கல்வி, வேலைக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கர்ப்பிணிப் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சூரியன், சனி என முக்கிய கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் உங்களது ராசிநாதன் குருபகவான் 6ம் வீட்டில் மறைந்து கேதுவுடன் தொடர்வதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகளே, சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தலைமையின் தனிக் கவனத்தை நீங்கள் பெறுவீர்கள்.
கன்னிப் பெண்களே, உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மாணவர்களே, அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். சூரியன் 10ல் அமர்ந்ததால் உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சிலருக்கு வேறு நல்ல நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரக்கூடும்.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 18, 19, 25, 26, 27, 28 அக்டோபர் 5, 6, 7, 14, 15, 16
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 9, 10, 11ந் தேதி நண்பகல் வரை சலிப்பு, சோர்வு வந்து நீங்கும்.
பரிகாரம்:
சென்னை-மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை தரிசியுங்கள். கட்டடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.
மகரம்:
மற்றவர்களின் மனம் புண்படும் படி நடந்து கொள்ளக் கூடாது என்பதில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள், கலகலப்பாக சிரித்துப் பேசி எதிரியையும் தன்வயப்படுத்துவீர்கள். உங்கள் ராசிக்கு யோகாதிபதியான புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் சென்றுகொண்டிருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்ப பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தருவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.
வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்களின் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சுக்கிரன் 28ந் தேதி முதல் 8ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவீர்கள். உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று வலுவாக 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பெரிய சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.
செவ்வாய் 27ந் தேதி முதல் லாப வீட்டில் வந்தமர்வதால் சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தாயாரின் ஆசீர்வாதமும் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குருபகவான் 5ம் வீட்டிலேயே வலுவாக நின்று கொண்டிருப்பதால் பிள்ளை பாக்யம் உண்டாகும். பிள்ளைகள் புகழடைவார்கள்; அயல்நாடு செல்வார்கள். நல்ல வரனும் அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
அரசியல்வாதிகளே, ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள்.
கன்னிப் பெண்களே, திருமணம் கூடி வரும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும்.
மாணவர்களே, உயர்கல்வியில் வெற்றியுண்டு. ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.
வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களுக்கு உதவுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையறிந்து கொள்முதல் செய்வதால் லாபம் அதிகரிக்கும். ஹோட்டல், துணி, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களை திருத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும்.
கலைத்துறையினரே, உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.
விவசாயிகளே, அடுத்தடுத்த விசேஷங்களால் வீடு களை கட்டும். வங்கியில் கடன் கிடைக்கும். நினைப்பவை நிறைவேறும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 19, 20, 21, 22, 28, 29, 30 அக்டோபர் 1, 3, 7, 8, 10.
சந்திராஷ்டம தினங்கள்:
அக்டோபர் 11ந் தேதி நண்பகல் முதல் 12, 13ந் தேதி மாலை 6 மணி வரை யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.
பரிகாரம்:
தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை குருபகவானை தரிசித்து வழிபடுங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
கும்பம்:
எதிலும் புரட்சிகரமாக சிந்தித்து யதார்த்தமான முடிவுகள் எடுக்கும் நீங்கள், பண்பாடு கலாசாரத்தை மீறாதவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதி சுக்கிரன் 6ம் வீட்டிலேயே மறைந்து கொண்டு வாகன விபத்து, வீடு பராமரிப்புச் செலவு, கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், எதைப் பேசினாலும் அது பிரச்னையாகப் போய் முடிவது இப்படி பல்வேறு இன்னல்களை தந்துக் கொண்டிருக்கும் நிலையில் 28ந் தேதி முதல் 7ல் வந்து அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கத் தொடங்குகிறார். எனவே மனஉளைச்சல் நீங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள்.
வாகனப் பழுது நீங்கும். வாகன விபத்துகளும் குறையும். மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். 27ந் தேதி முதல் செவ்வாய் 10ம் வீட்டில் ஆட்சிபெற்று வலுவாக அமர்வதால் உத்யோகத்தில் இருக்கும் பிரச்னைகள் நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். இழந்த சலுகை, உரிமைகளை மீண்டும் பெறுவீர்கள். யோகாதிபதி புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுகொண்டிருப்பதால் பிள்ளைகளால் நிம்மதியுண்டு.
நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். சூரியன் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நுழைந்திருப்பதால் திடீர் பயணங்கள் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு தொந்தரவுகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வழக்கு சாதகமாகும். குருபகவான் 4ம் வீட்டிலேயே தொடர்வதால் எதிலும் ஒருவித பயம் இருக்கும். எங்குச் சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள்.
அரசியல்வாதிகளே, உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.
கன்னிப் பெண்களே, கசந்த காதல் இனிக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள்.
மாணவர்களே, விளையாட்டு, படிப்பு என்று அனைத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. பெட்ரோல், டீசல், செங்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். உங்களிடம் பொறாமைப்பட்டுக்கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனசை புரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையினரே, வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.
விவசாயிகளே, பூச்சித் தொந்தரவு நீங்கும். மரப்பயிரால் லாபமுண்டு. வாய்க்கால் வரப்புச் சண்டை தீரும். தலைநிமிரும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 21, 22, 23, 24, 30 அக்டோபர் 1, 2, 3, 5, 9, 10, 12.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 17, 18ந் தேதி மதியம் 1:30 மணி வரையிலும் அக்டோபர் 13ந் தேதி மாலை 6 மணி முதல் 14, 15 தேதிகளிலும் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.
பரிகாரம்:
திருநெல்வேலியில் அருளும் உச்சிஷ்ட கணபதியை தரிசித்து வாருங்கள். தாயிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.
மீனம்:
பூமியைப் போல் பொறுமையும் ஆன்மிக நாட்டமும் உடைய நீங்கள், மறப்போம் மன்னிப்போம் என்றிருப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 8வது வீட்டிலேயே அமர்ந்துகொண்டு உங்களைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறார். 26ந் தேதி வரை 8வது வீட்டிலேயே நின்றுகொண்டு சேமிப்புகளை கரைப்பார். சகோதரர்களுக்குள் சண்டை, சச்சரவுகளையும் தந்து கொண்டிருக்கிறார். எனவே கவனமாக இருங்கள். 27ந் தேதி முதல் செவ்வாய் ஆட்சிப் பெற்று 9ம் வீட்டில் அமர்வதால் சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். முன்கோபம் விலகும்.
பணவரவு அதிகரிக்கும். ஷேர், ரியல் எஸ்டேட் மூலமாகவும் பணம் வரக்கூடும். 27ந் தேதி முதல் புதன் 8ம் வீட்டில் நுழைவதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் சில உதவிகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்துகொண்டு ஓரளவு நிம்மதியை தந்து கொண்டிருக்கும் சுக்கிரன் 28ந் தேதி முதல் 6ல் சென்று மறைவதால் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். உங்கள் ராசிக்கு 8ல் சனி அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.
ராசிக்கு 7ம் வீட்டில் சூரியன் அமர்ந்ததால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படும், கவனமாக இருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து போகும். மனைவிவழியில் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனான குருபகவான் கேதுவுடன் சேர்ந்து காணப்படுவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.
அரசியல்வாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள்.
கன்னிப் பெண்களே, காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் பேச்சைக் கேளுங்கள்.
மாணவர்களே, விளையாட்டுத்தனத்தை விட்டு விடுங்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
வியாபாரத்தில் மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். புது ஒப்பந்தங்களை யோசித்து செய்வது நல்லது. பங்குதாரருடன் மனக்கசப்பு வந்து நீங்கும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது அதிகாரி மதிப்பார்.
விவசாயிகளே, வரப்புச் சண்டை, வாய்க்கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்:
செப்டம்பர் 17, 21, 23, 24, 25, 26 அக்டோபர் 2, 3, 5, 6, 11, 12, 13, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்:
செப்டம்பர் 18ந் தேதி மதியம் 1:30 மணி முதல் 19, 20ந் தேதி மாலை 4 மணி வரையிலும் அக்டோபர் 16ம் தேதியும் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை-குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
Key word:துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்-புரட்டாசி மாத ராசிபலன்கள்
No comments:
Post a Comment