Pages

Monday, 10 September 2012

2 வருடங்களுக்கு பிறகு அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்தார்


நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். கடைசியாக தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திலும் தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்’ படத்திலும் நடித்தார். அதன்பிறகு திருமணத்துக்கு
தயாரானார்.

ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத், நயன்தாராவை வைத்து ‘பில்லா’ படத்தை இயக்கியவர்.

தற்போது எடுக்கும் படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவாகவில்லை. இதன் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அஜீத்துடன் நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்றார். படப்பிடிப்பு குழுவினருடன் சிரித்து சகஜமாக பேசி பழகினார். இந்த படத்தை முடித்து விட்டு தெலுங்கு படத்துக்கு போகிறார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads