Pages

Tuesday, 11 September 2012

தமிழ்நாட்டில் 1000 புதிய பஸ்கள்:முதல் -அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்




தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழகங்களில் பஸ்களை புதுப்பொலிவுடன் இயக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி ஆண்டுதோறும் 3 ஆயிரம் புதிய பஸ்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூன் மாதம் தலைமை செயலகத்தில் 864 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டன. அதேபோல இன்று 1000 புதிய பஸ்கள்
புதிதா இயக்கப்பட்டுள்ளன.

இதற்காக சென்னை தலைமை செயலகத்துக்கு புதிய பஸ்கள் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டு இருந்தன. இவற்றை முதல் -அமைச்சர் ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 7 டிரைவர்களுக்கு அதற்கான சாவியையும் வழங்கினார்.

போக்குவரத்து கழகங்களில் ஒய்வு பெற்ற பஸ் தொழிலாளர்கள் 1874 பேர்களுக்கு ஓய்வூதிய தொகைக்கான ரூ.35 கோடியே 88 லட்சத்தையும் வழங்க உத்தரவிட்டார். அதில் 2 தொழிலாளர்களுக்கு அவர் ஓய்வூதிய தொகையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பி.கே. பிரசாத் வரவேற்று பேசினார். போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். மாநகர போக்குவரத்து அரசு நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இன்று விடப்பட்ட 1000 புதிய பஸ்களில் 379 புதிய வழித்தடங்கள் ஆகும். ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திற்கும் விடப்பட்டுள்ள புதிய பஸ்கள் வருமாறு:-

1. மாநகர போக்குவரத்து கழகம்-45

2. அரசு விரைவு போக்குவரத்து கழகம்-181

3. விழுப்புரம்-195

4. சேலம்-115

5. கோவை-173

6. கும்பகோணம்-149

7. மதுரை-39

8. நெல்லை-95

கடந்த 8.5.2012 அன்று அரசு போக்குவரத்து கழக இயக்க பேருந்துகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் இப்போது அரசு போக்குவரத்து கழக இயக்க பேருந்துகளின் எண்ணிக்கை 20,207 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக விடப்பட்டுள்ள பஸ் வழித்தடம் வருமாறு:-

144 இ:- புதிய எருமை வெட்டிபாளையம்- கோயம்பேடு மார்க்கெட் (வழி காரனோடை).

248 பி:- வள்ளலார் நகர்- புத்தகரம் (வழி:அம்பத்தூர், கள்ளிக்குப்பம்),

142 பி:- பெரம்பூர் -புத்தகரம் (வழி- ரெட்டேரி).

எம்.88 (கட்சர்வீஸ்): அய்யப்பன் தாங்கல்- குன்றத்தூர் (வழி:போரூர், மதனந்தபுரம், மவுலிவாக்கம்).

66 கே: பூந்தமல்லி-கீழ்க் கட்டளை (வழி:குமணன் சாவடி).

ஏ19:- மத்திய கைலாஷ்- சோளிங்கநல்லூர் (வழி: பெருங்குடி).

170 ஏ (கட்சர்வீஸ்): மூலக்கடை- கோயம்பேடு பஸ்நிலையம் (மாதவரம் பைபாஸ்) உள்பட 45 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டுள்ளன.

இந்த விழாவில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மாணவ-மாணவிகளை நேரில் வரவழைத்து தனது கையால் இலவச சைக்கிள் களை வழங்கினார்.

108 அவசர கால ஆம்புலன்ஸ் வண்டி, அமரர் ஊர்திகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய வாகனங்களையும் முதல்-அமைச்சர் ஜெய லலிதா இன்று நடந்த விழாவில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் முகமது ஜான், விஜய் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads