ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
கள்ள மனம் துள்ளும்
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கனிந்த பழம் தானே விழும்.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குரங்கின் கைப் பூ மாலை.
குறைகுடம் தளும்பும் நிறைகுடம் தளும்பாது.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுந்தம் போனானாம்,
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையிற் சேராது.
செய்வன திருந்தச் செய்.
சேற்றில் செந்தாமரை போல.
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
தம்பி உண்டான் படைக்கு அஞ்சான்.
தவளை தன் வாயாற் கெடும்.
நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடரி கொண்டு வெட்டகிறான்.
நண்டு கொழுத்தால் வலையில் இராது தண்டு கொழுத்தால் தரையில் இராது.
நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
நித்திய கண்டப் பூரண ஆயிசு.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
பணம் என்னசெய்யும் பத்தும் செய்யும்.
பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
பத்துப் பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பழுத்தபழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
புலிக்குப் பிறந்தது பூயையாய்ப் போகுமா?
பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம்.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
பேராசை பெருநட்டம்.
பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
பொறுமை கடலினும் பெரிது.
Key word:பழமொழிகள் 2
No comments:
Post a Comment