Pages

Saturday, 8 September 2012

100-வது ராக்கெட் நாளை ஏவப்படுகிறது- கவுண்ட்டவுன் தொடங்கியது


இந்திய விஞ்ஞானிகள் சாதனை: 
100-வது ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்பட இஸ்ரோ விஞ்ஞானி கள் பயப்பக்தியுடன் ஏழு மலையானை வணங்கினார்கள். 100-வது ராக்கெட்டில் இந்திய செயற்கைக் கோள் எதுவும் இல்லை.


 100-வது ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 51 மணி நேரம் கவுண்ட்டவுன் நேரமாகும். இந்த 51 மணி நேரத்தில் எரிபொருள் நிரப்புவது, கம்ப்யூட்டர் கருவிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும். தற்போது அந்த பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் மும் முரமாக நடந்து வருகின்றன.

பிரான்சு நாட்டுக்கு சொந்தமான 712 கிலோ எடையுள்ள ஸ்பாட்-6 என்ற செயற்கைக்கோளும், ஜப்பான் நாட்டின் 15 கிலோ எடையுள்ள பிராய் டெரஸ் என்ற செயற்கைக்கோளும் நாளை 100-வது ராக்கெட்டில் செல்ல உள்ளன.  

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முதன் முதலாக 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 'ஆர்யபட்டா' எனும் செயற்கை கோளை ரஷியா உதவியுடன் விண்ணில் செலுத்தியது.
 
அதன் பிறகு ஆந்திர மாநில கடலோரத்தில் சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுக்களை இந்திய விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகிறார்கள்.

முதலில் இந்தியா தனது செயற்கை கோள்களை மட்டுமே இந்த தளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பி வந்தது. சமீப காலமாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது.

அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். ஒரே சமயத்தில் 7 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது.

இஸ்ரோ நிறுவனம் கடந்த 37 ஆண்டுகளில் 62 ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இது தவிர பிற நாடுகளின் செயற்கைகோள்களுடன் 37 ராக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தம் இதுவரை 99 ராக்கெட்டுக்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவி உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் 100-வது ராக்கெட் நாளை (ஞாயிறு) காலை 9.51 மணிக்கு செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் பி.எஸ். எல்.வி. ரக ராக்கெட்டாகும்.

இந்த ராக்கெட்டுக்கு பி.எஸ்.எல்.வி.-சி21 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் வரிசையில் 22- வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பருவ நிலை ஏற்றதாக உள்ளதால் திட்டமிட்டப்படி பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் நாளை காலை ஏவப்படும். இஸ்ரோ வர லாற்றில் இது சாதனை மைல் கல்லாக கருதப் படுவதால், 100-வது ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார்.

இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அவர் இன்றிரவு ஸ்ரீஹரி கோட்டா சென்று தங்கு வார். இதையொட்டி ஸ்ரீஹரி கோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அங்கு பி.எஸ்.எல்.வி.- சி21 ராக்கெட் மாதிரி வடிவத்தை ஏழுமலையான் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads