Pages

Tuesday 18 September 2012

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி கோவிலில் இன்று கொடியேற்றம்: 1 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று அங்குரார்பணம் நடந்தது. ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக் சேனர் சங்கு, சக்கரம், சதம், கேடயத்தின் தங்க திருட்சை வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் உலா வந்தார்.

அதாவது பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை ஏழுமலையான் சேனாதிபதி பார்வையிடுவது இந்த நிகழ்ச்சியின் ஐதீகம்
ஆகும். இன்று மாலை 4 மணி அளவில் திருமலை திருமலாய மண்டபத்தில் திவாஜரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.


அனைத்து தேவர்களையும் விழாவுக்கு அழைக்கும் முகமாக கருட உருவம் வரைந்த வெள்ளை கொடி தங்க கொடி மரத்தில் ஏற்றப்படுகிறது. விழாவை காண இன்று காலையில் இருந்தே பக்தர்கள் திருமலையில் கூடி வருகிறார்கள். 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய சேஷ வாகனத்தில் வீதி உலா வருகிறார். இதனை தரிசிக்கும் பக்தர்களுக்கு அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய விழாவில் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி கலந்து கொள்கிறார். ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்.

வருகிற 26-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது. தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 22-ந் தேதி நடக்கிறது. 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது, 26-ந் தேதி சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.
Key word:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா. 

1 comment:

ADVERTISE HERE.

space for ads