Pages

Thursday, 2 August 2012

உருளை,காலிஃபிளவர் கறி

உருளை,காலிஃபிளவர் கறி:


 தேவையானவை:
1,உருளைகிழங்கு -2
2,காலிஃபிளவர் -சிறிது
3,வெங்காயம் -1
4,இஞ்சிபூண்டு விழுது -1/2ஸ்பூன்
5,தக்காளி -1
6,கறிமசால்தூள் -2ஸ்பூன்
7,மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
8,உப்பு -தேவையான அளவு
9,எண்ணை -2ஸ்பூன்
10,பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
11,கொத்தமல்லிதழை -சிறிது
செய்முறை:
 உருளைகிழங்கை வேகவைத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
காலிஃபிளவரை சுத்தம்செய்து சுடுதண்ணீரில் 5நிமிடம் போட்டு எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து வதக்கி உருளைகிழங்கு,காலிஃபிளவர் போட்டு பிரட்டி,உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.
தண்ணீர் சுண்டியவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads