Pages

Thursday, 2 August 2012

ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர்மாற்றம்.

உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் இ-மெயில் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.

அட! பெயர் மாற்றம் மட்டும் அல்லாமல் நிறைய புதிய வசதிகளையும் வாரி வழங்கியுள்ளது. அந்த வசதிகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள். இந்த அவுட்லுக் இமெயில் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம். அதோடு ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களும் உடனுக்குடன் அவுட்லுக் இ-மெயில் சேவையின் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
வேர்ட்ஸ், எக்எல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில், அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும். அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.
இன்னும் ஒரு முக்கிய வசதியையும் இதில் பெறலாம். ஆம்! ஸ்கைப் வீடியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம். ஆனால் இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான் பயன்படுத்த முடியும்.
பொதுவாக ஸ்கைப் வீடியோ கால் வசதியனை டவுன்லோட் செய்து தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த அவுட்லுக் சேவையிலேயே, ஸ்கைப் வீடியோ கால் வசதியினை பெறலாம். இதில் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
நியூஸ்லெட்டர், ஆஃபர்ஸ், டெய்லி டீல்ஸ், சோஷியல் அப்டேட்ஸ் போன்ற தகவல்களுக்கு தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்ள முடியும்.
இப்படி தனியாக ஃபோல்டர்களை உருவாக்கி கொள்வதன் மூலம், எது சம்மந்தமாக தகவல்கள் வருகிறதோ, அந்த செய்திகள் அட்டோமெட்டிக்காக அதன் ஃபோல்டருக்கு சென்றுவிடும். இது போன்ற பல நவீன வசதிகளை அள்ளி தருகிறது மைக்ரோசாஃப்டின் புதிய அவுட்லுக்.
சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ல் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1997ம் ஆண்டில் 40 கோடி டாலருக்கு வாங்கியது என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads