Pages

Friday, 10 August 2012

அஞ்சலி முத்திரை-ரத்த ஓட்டம் சீராக செல்லதூண்டும்

முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான். இதனை அஞ்சலி முத்திரை
 என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.

வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும். இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும்.

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.

பயன்கள்:
இந்த முத்திரை செய்வதால் உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக செல்ல தூண்டுகிறது.
Key word: அஞ்சலி முத்திரை,ரத்த ஓட்டம் சீராக செல்ல தூண்டும்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads