ஒரே மாதத்தில் இரண்டு தடவை பவுர்ணமி வரும்போது நிலாவின் நிறத்தில் மாறுதல் ஏற்படும். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக நிலா நீல நிறத்துக்கு மாறும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகஸ்டு மாதத்தில் 2 தடவை பவுர்ணமி ஏற்பட்டது. கடந்த 2-ந்தேதி முதல் பவுர்ணமி தோன்றியது. இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது பவுர்ணமியாகும். எனவே இன்று வானில் நிலா நீல நிறத்துடன் இருக்கும். இன்று மாலை 6.13 மணி முதல் இரவு 7.28 மணி வரை சுமார் 1 1/2 மணி நேரத்துக்கு நிலா நீல நிறத்துடன் தோன்றும்.
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நீல நிற நிலாவை தெளிவாக பார்க்க முடியும். இன்று மாலை தோன்றும் நீல நிற நிலா மிகவும் அபூர்வமான ஒன்றாகும். வெண்மையான வானில் நிலா மட்டும் நீல நிறத்தில் தோன்றுவது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இதே போன்ற நீல நிற நிலா இனி 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் வானில் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மாலை நாளிதழ்-தேசியச்செய்திகள்

No comments:
Post a Comment