Pages

Thursday, 5 July 2012

உலகின் செக்ஸியான பெண்!

4வது முறையாக உலகின் செக்ஸியான பெண்ணாக கத்ரீனா கைப் தேர்வு! 


 பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் 4வது முறையாக உலகிலேயே செக்ஸியான பெண்ணாக தேர்வாகி இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை கத்ரீனா கைப். பூம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அவர் இப்போது முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கிறார். ஏற்கனவே 3 முறை உலகின் செக்ஸி பெண் பட்டத்தை வென்றிருந்த கத்ரீனாவுக்கு இப்போது 4வது முறையாக
 அந்த பட்டம் கிடைத்திருக்கிறது. பிரபல எப்.ஹெச்.எம்., மேகஸின் உலகின் செக்ஸியான பெண்ணுக்கான ஓட்டெடுப்பு நடத்தியது. ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் ஹாலிவுட்டின் பிரபலங்கள் மேகன் பாக்ஸ், ஏஞ்சலா ஜூலி ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தாண்டும் கத்ரீனாவே அந்த ‌பட்டத்தை பெற்றிருக்கிறார். தொடர்ந்து 4வது முறையாக இந்தப்பட்டத்தை கத்ரீனா பெற்றுள்ளார்.
இதுகுறித்து கத்ரீனா கூறுகையில், செக்ஸி பெண்ணாக தேர்வானது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. உடல் தோற்றத்தை வைத்து மட்டும் மக்க‌ள் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. என்னைப்பற்றி முழுமையாக தெரிந்ததால் தான் அவர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் செக்ஸி என்பது நாம் ‌அணியும் உடை மூலமாக வெளிப்படுவது கிடையாது. என்னை பொருத்தவரை காட்டன் சேலை அணிந்து கொண்டு, மேக்கப் இல்லாமல் தோன்றுவதே செக்ஸியானதாக கருதுவேன் என்று கூறியுள்ளார்.

Key word:செக்ஸியான பெண்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads