Pages

Thursday, 5 July 2012

பட்டனை தட்டினால் போதும்-பணம் கொட்டும்

<பட்டனை தட்டினால் போதும்>பணம் கொட்டும்!

வங்கிக் கணக்கில் குருவி சேர்த்தது போல் சிறுகச் சிறுக பணம் சேர்க்க பல மணி நேரம் கால்கடுக்க வரிசையில் நின்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது.
வீட்டிலிருந்தபடியே வங்கிக் கணக்கை கையாளும் எலக்ட்ரானிக் சிஸ்டம் இப்போது வந்துவிட்டது. எலக்ட்ரானிக் வங்கி சேவையை உபயோகிப்போர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதனால், ஏடிஎம் மையங்களையும், வங்கி சேவையையும் இணைத்து செயல்படுத்த பல்வேறு யோசனைகளை அதிகாரிகள் வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். அப்படி படிப்படியாக செயல்படுத்தப்பட்டதுதான் ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு. பணத்தை கையோடு எடுத்துச் சென்று கண்விழித்து பாதுகாப்பாக கொண்டு சென்ற நிலை மாறி நினைத்த இடத்தில் வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுத்துக் கொள்ள முடிகிறது.
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனில் ரயில், விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் எப்போது வேண்டுமானாலும் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.
வங்கிக் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது வைப்புநிதிக்கு பணம் செலுத்துவது, வேறு வங்கிக் கணக்கிற்கு பணபரிவர்த்தனை, ஆயுள் காப்பீடு மாத பிரீமியம் செலுத்தும் வசதி, வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் எளிமைப்படுத்தித் தருகிறது எலக்ட்ரானிக் வங்கி சேவை.
விரல்
நுனியில்
வங்கிச் சேவை
24 மணி நேரமும்
பணம் கிடைக்கும்
நீண்ட க்யூ, கால் வலி இல்லை
வங்கி கணக்கு இருப்பு அறியலாம்
உலகின் எந்த மூலைக்கும் பணம் பரிமாற்றம்
வருமான வரி செலுத்த முடியும்
ஆயுள் காப்பீடு செலுத்தலாம்
வர்த்தக பயன்பாடு அதிகம்
திருடர் பயம் தேவையில்லை
இதனால் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆற்ற வேண்டிய பணிகளும் ஒரே இடத்தில் முடிவதால் நமக்கு கிடப்பதற்கரிய காலம் மீதமாகிறது. குறித்த காலக்கெடு, நேரத்திற்குள் அலைச்சல் இல்லாமலேயே வீட்டிலிருந்தபடியே செலுத்த வகை செய்வது எலக்ட்ரானிக் வங்கி சேவை.
பல்வேறு கட்டணங்களையும் எலக்ட்ரானிக் வங்கி சேவையால் செலுத்தும் போது நமது வாழ்க்கை முறை எளிமையாகி வருகிறது என்றால் அது மிகையல்ல.
சுருக்கமாக சொல்வதென்றால் ஏடிஎம் கார்டு என்பது நவீன அட்சய பாத்திரம். கேட்டதெல்லாம் அதிலிருந்து கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads