Pages

Wednesday, 18 July 2012

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம்


மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம்:



        மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக மத்திய சுற்றுலாத் துறை ஆலோசகர் ஸ்ரீகாந்த் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். எந்நேரமும் கோவில் கோபுரங்களை காணும் வகையில் சூரிய ஒளி மூலம் ஒளிரும் நவீன மின் விளக்குகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் மதுரையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான புதிய பணிகளை மாநில சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்திடவும், புதிய திட்டப் பணிகளை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
       கோவில் கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. பொற்றாமரைக் குளத்தை சுற்றிய மண்டபங்களின் தூண்களில் நவீன வண்ண விளக்குகளை பொருத்தவும், புது மண்டபத்தில் ஒளி, ஒலி காட்சியை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
       மாரியம்மன் தெப்பக்குளம் மைய மண்டபத்தில் ஏற்கனவே புதிய வர்ணம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் சுற்றுலாத் துறை மூலம் மேலும் பல பணிகளை செயல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் போது மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலர் தர்மராஜ் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பொறியாளர் குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மத்திய சுற்றுலா துறை ஆலோசகர் ஸ்ரீகாந்த் அளிக்கும் ஆலோசனை அடிப்படையில் மதுரைக்கு ஓரிரு மாதங்களில் சிறப்பு சுற்றுலா குழு வருகை தரவுள்ளதாகவும், அக்குழுவினர் பார்வையிட்ட பின்னர் சுற்றுலா சிறப்பு திட்டங்கள் மீனாட்சி திருக்கோவிலில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads