ஆசிரியர் தகுதி தேர்வு விடைகள் வெளியீடு:
ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு
நடந்தது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் ஆயிரத்து 27 மையங்களில் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி சென்னையிலுள்ள அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டுவிட்டதால், முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தேர்வர்கள் அதை உரிய ஆதாரத்துடன் ஜூலை 30ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்பிறகு, பெறப்படும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் கீ ஆன்சர் எனப்படும் விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான சூசூசூ.சிஙுஸ.சிடூ.டூடுஷ.டுடூ ல் வெளியிடப்பட்டுள்ளது.முதல் தாளுக்கான கீ ஆன்சர் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
_0.jpg)
No comments:
Post a Comment