இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள்.
Key word:இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள்
- ஜனாதிபதி பல அதிகாரிகளின் உதவியோடு நாட்டின் ஆட்சி முறையை நடத்துகிறார். முக்கியமாக மந்திரிகள் வழியாக அரசு நடைபெறுகிறது. பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிக்கிறார்.
- மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்டின்) நீதிபதிகளையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
- மாநிலங்களின் தலைவர் களான கவர்னர்களும் அவராலேயே நியமிக்கப்படுகிறார்கள்.
- நம் நாட்டின் பிரதிநிதிகளாக அயல்நாடுகளுக்கு தூதுவர்கள் செல்கிற தூதுவர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்.
- பிற நாடுகளிலிருந்து வரும் தூதுவர்களை வரவேற்பதும் அவரே. நமது நாட்டின் படைகளின் தலைவர் ஜனாதிபதியே.
- நாட்டிற்கான சட்டங்களை செய்யும் பார்லிமெண்ட் எனப்படும் பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் உடையவரும் அவரே. சட்டசபைகள் தங்கள் வேலையை தொடங்கும் முன் சொற்பொழிவாற்றி, அவை பணியாற்ற வேண்டிய துறைகளை குறிப்பிடுவார்.
- சட்டசபைகளை கலைக்கும் அதிகாரமும் அவருடையதே.
- பாராளுமன்றம் இயற்றும் மசோதாக்கள் அவருடைய சம்மதம் பெற்றால்தான் சட்டங்களாகும். மசோதாவிற்கு அவர் சம்மதமளிக்கலாம். மறுபடியும் ஆலோசனை செய்யும்படி மசோதாவை திருப்பி அனுப்பலாம். ஆதலால் அவர் விரும்பும் சட்டங்களை கொண்டு வரவும்,
- விருப்பமில்லாத சட்டங்களை தடுக்கவும் அவருக்கு செல்வாக்கு உண்டு.
- குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கவும், மாற்றவும், நிறுத்தவும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு.
- மரண தண்டனையை மாற்றி குற்றவாளிக்கு உயிர் பிச்சை அளிக்கலாம்.
- சில குறிப்பிட்ட சமயங்களில் அவர் அவசர சட்டங்களை ஏற்படுத்தலாம். நாட்டில் கலகம், பிற நாடுகளுடன் போர், எதிர்பாராத நெருக்கடி ஆகிய சமயங்களிலேயே அவருக்கு இந்த அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டங்களை பிறகு பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- ஜனாதிபதியின் அதிகாரங்கரளை கண்டு பிரமித்து விடாதீர்கள். எல்லா ஆணைகளும் அவர் பெயரிலேயே வெளிவரும். எல்லா கடமைகளையும் ஆற்றுபவரும் அவரே. ஆனால் அவர் அதிகாரம் எல்லையற்றதன்று. எல்லாவற்றையும் அவர் பெயரால் நடத்துவது என்பது மரபு.
Key word:இந்திய ஜனாதிபதியின் அதிகாரங்கள்
No comments:
Post a Comment