Pages

Tuesday, 24 July 2012

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையம்


விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் இன்று சோதனை ஓட்டம்:

 சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் ஆகியவை உள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததால் விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான ஆணையம் திட்டமிட்டது. இதற்காக முதல் கட்டமாக ரூ.2,300 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. தற்போது இப்பணி முடியும் தருவாயில் உள்ளது
.
சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இன்று சோதனை ஓட்டம் நடத்த விமான நிலைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இதன்படி இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வந்த விமானம், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் தரை இறக்கப்பட்டது.
அதில் இருந்து பயணிகள் எவ்வளவு நேரத்தில் வெளியேறுகிறார்கள். பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் எவ்வளவு நேரத்தில் சோதனை செய்து முடிக்கிறார்கள் என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் பற்றி விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இதில் உள்ள குறைபாடுகள் என்னென்ன என்பதை அறிந்து அவை சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய விமான ஆணைய தலைவர் அகர்வால் கூறும்போது, சென்னையில் உள்ள உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான முனையங்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு பணிகள் முடியவில்லை. அவை முடிந்ததும் ஆகஸ்டு 15-க்கு பிறகு விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் திறக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads