பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரதேசி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.
இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று அண்மையில் முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால் எடிட்டிங், இசை கோர்ப்பு பணிகள் தற்போது
தொடங்கியுள்ளன.
பாலா படங்கள் என்றாலே ஒரு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்படும். ஆனால் பாலா, இப்படத்தை 80 நாட்களில் முடித்துள்ளார். மிக குறுகிய காலத்தில் பாலா எடுத்த முதல் படம் இதுதான். ‘எரியும் தணல்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அதர்வா, தன்ஷிகா, வேதிகா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாலாவின் படங்களில் இசையின் பங்களிப்பும் முக்கியத்துவமாக இருக்கும். இயக்குனர் பாலாவும், ஜி.வி.பிரகாஷும் இணையும் முதல் படம் என்பதால் இசை குறித்த எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பரதேசி’ பாலாவின் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment