Pages

Saturday, 7 July 2012

4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு!

தமிழக மின்வாரியத்தில் 4 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!
















தமிழக மின்வாரியத்தில் 4 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிட முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் புதிதாக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன் மின்வாரியத்தின் அடிப்பை களப்பணிகள் துரிதமாக நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெ., இன்று
பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மின்வாரியத்தில் 4 ஆயிரம் உதவிக்களப்பணியாளர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 4 ஆயிரம் பேரும் மாநிலம் முழுவதும் பரவலாக பணியில் அமர்த்தப்படுவர். இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி காலமாக கருதப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் தொகுப்பூதியமாக ரூ .3 ஆயிரத்து 250 வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கூடங்குளம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் துவக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads