திருமால் தலத்தில் மருகன்
மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் ஒரு முருகன் தலம் உள்ளது. இதனை சிலர் அறுபடை வீடுகளில் ஒன்று என்கிறார்கள். சிறந்த சோலைகளுடனும், நூபுர கங்கை என்ற
நீரூற்றையும் திருமால் உருவாக்கியவை. இம்மலை மகாலட்சுமியின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எமன் தவம் புரிந்து இங்கே ரிஷப மலையாக இருப்பதாக ஐதீகம். இங்கு சந்நதியில் உள்ள கல்லினால்
செய்யப்பட்ட வேல் சிற்ப நுணுக்கம் மிக்கது. முருகனுக்காகவே காலம் மாறி, கந்த சஷ்டி சமயத்தில் (ஐப்பசி மாதம்) பழுக்கும் நாவல் மரம் இங்குள்ளது. திருமால் இருப்பிடத்தில் அவரது
மருமகனுக்கும் ஓர் இடம்!

No comments:
Post a Comment