Pages

Wednesday, 27 June 2012

பழமொழிகள்-1


     பழமொழியை அனுபவத்தின் குழந்தைகள் என்று சொல்வார்கள்.ஆகையால்பழமொழியை பிழைமொழி என்று சொல்லிப் புறங்கையால் ஒதுக்கிவிடமுடியாது.தமிழ் இலக்கியத்தில் பழமொழியானது , முதுசொல், முதுமொழி,பழஞ்சொல்,மூதுரைஎன்று பலவாறாக குறிக்கப்படுகிறது.தொல்காப்பியத்தில் பழமொழிக்கான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
        பழமொழிகள்:

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
  • அழுகிற பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு,
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
  • ஆனை பசிக்கு சோளப் பொரி.
  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
  • இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்,
  •    தென்னையை வைத்தவன் தின்று விட்டு சாவான், பனையை வைத்தவன் பார்த்துக்கொண்டே சாவான்.
Key word:பழமொழிகள்

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads