Pages

Wednesday, 27 June 2012

எம்.ஜி.ஆர். நினைவிடம்

எம்.ஜி.ஆர். நினைவிடம்:


தமிழக முன்னாள் முதலமைச்சரும் திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவருமான மக்கள் போற்றும் நடிகருமான புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நினைவிடம் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அமைந்துள்ளது. இச்சதுக்கத்தில் விரிந்த தாமரை இதழ்கள் போன்ற அமைப்பின் நடுவில் சமாதி அமைந்துள்ளது. முகப்பில் இருகரம் கூப்பி வணங்குவது போன்ற நுழைவு வாயில் உள்ளது. இது தலைகீழாகப் பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களின் இரட்டை இலை சின்னம் போன்றும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமாதியின் அருகே நினைவு தூண் உள்ளது.
        எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அனைத்து கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் திரளாக வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு தங்களின் மரியாதையை செலுத்துகின்றனர்.
Key word:எம்.ஜி.ஆர். நினைவிடம்




No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads