Pages

Monday, 11 June 2012

கர்ப்பகால ஆரோக்கியம்

கர்ப்பகால ஆரோக்கியம்


கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்னரே உடல் எடையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆய்வில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாடுகள் உடல் எடையை மூலம் கட்டுக்குள் வைத்தால், இவ்விதமான பிரச்சினைகளைத் தவிர்க்க அது உதவுகிறதே ஒழிய வயிற்றிலுள்ள குழந்தையுடைய ஆரோக்கியத்தையோ, தாயுடைய ஆரோக்கியத்தையோ அது பாதிக்கவில்லை என புதிய ஆய்வு தெளிவுபடுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதாலும், தனக்கும் வயிற்றில் வளரும் பிள்ளைக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகமாக உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் கர்ப்பிணிப் பெண்கள் அளவுக்கதிகமாக உடல் எடை அதிகரிக்கின்ற பிரச்சினையைத் தவிர்க்கலாம் என்றும், மகப்பேறு தொடர்பாக ஏற்படக்கூடிய சில சிக்கல்களையும் தவிர்க்கலாம் என்றும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கிறது.
கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தவர்களுக்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்துவிடுகிறது என்பதற்கும் ஆதாரம் இல்லை என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் கர்ப்பகாலத்தில் பெண்கள் தமது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுவதாக தப்பாகப் புரிந்துகொள்ளக்கூடாது என நிபுணர்கள் சிலர் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads