Pages

Tuesday, 12 June 2012

சூரிய ஒளியில் இயங்கும் கார்

 
எரிபொருள் செலவின்றி, சூரிய ஒளியில் இயங்கும் கார்: 


 திட்டக்குடியைச் சேர்ந்த, ராஜசேகரன் வடிவமைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், பூவரசன்குப்பம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர், ராஜசேகரன். இவர், திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், லேப் டெக்னீஷியனாக பணிபுரிகிறார்.
இவர், சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கார் ஒன்றை வடிவமைத்துள்ளார். சூரிய ஒளியில் கிடைக்கும் மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்க, "டிஜிட்டல் இன்வெர்ட்டர்' பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், இரவு நேரத்திலும், தடையற்ற பயணத்தை தொடர முடியும்.இந்த கார், 30 கி.மீ., வேகத்தில் தினம், 200 கி.மீ., வரை செல்லக் கூடியது. காரின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடு, 25 ஆண்டுகள் வரை பழுதடையாது. காரில் உள்ள பேட்டரி மூலம் சேமித்த மின்சாரத்தை கொண்டு, வீட்டில் மின்சாரம் இல்லாத சமயங்களில், மிக்சி, டேபிள் டாப் கிரைண்டர், "டிவி' உள்ளிட்ட, மின் சாதனங்களை இயக்கிக் கொள்ளலாம். ராஜகேரன் கூறியதாவது:"மின்சாரம், பெட்ரோல், டீசல் பயன்படுத்தாமல், சூரிய ஒளியில் இயங்குவதால், செலவு இல்லை.
சுற்றுச்சூழல் மாசுபடுவது இல்லை. சூரிய ஒளியில் இருந்து சேமிக்கப்பட்ட மின்சாரம், மின் சப்ளை இல்லாத நேரங்களில், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுகிறது. சிறிய வகையில் வடிவமைத்துள்ள இந்த காரை தொடர்ந்து, அனைத்து கனரக வாகனங்களும், எரிபொருள் செலவின்றி இயக்க, முயற்சி எடுத்து வருகிறேன்.இந்த காரை உருவாக்க, 45 ஆயிரம் ரூபாய் செலவானது. தற்போது, ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் உள்ள இந்த காரை, விரைவில் இரண்டு பேர் பயணம் செய்யும் வகையில், வடிவமைக்க உள்ளேன்.'இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.
Key word:சூரிய ஒளியில் இயங்கும் கார்



1 comment:

  1. அற்புதமான கண்டுபிடிப்பு

    ReplyDelete

ADVERTISE HERE.

space for ads