Pages

Monday, 11 June 2012

அதிக வேலைவாய்ப்பு தரும் புவியியல் துறை படிப்புகள்



அதிக வேலைவாய்ப்பு தரும் புவியியல் துறை படிப்புகள்:


தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இணையாக அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பைத் தரக் கூடிய படிப்பாக புவியியல் துறை மாறியுள்ளது என சென்னைப் பல்கலைக்கழக புவியியல் துறை கூறுகிறது. தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய படிப்புகளை சென்னை பல்கலைக்கழகம் இத்துறையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய படிப்புகள் இதுபோல் எம்.எஸ்சி. ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் என்ற முதுநிலை பட்டப் படிப்பும் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சி.எம்.டி.ஏ., என்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்கெனவே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்காக இது அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஆன்-லைன் படிப்புகள் எம்.டெக். ஜியோ இன்ஃபர்மேடிக்ஸ் என்ற முதுநிலை பட்டப் படிப்பு வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜி.ஐ.எஸ்., ரிமோட் சென்ஸிங், ஜி.பி.எஸ். ஆகிய மூன்று தொழில்நுட்பங்கள்  குறித்து அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இந்த படிப்பில், சிறிய புராஜெக்ட் ஒன்றை மாணவர்கள் செய்ய வேண்டி இருப்பதோடு, தொழில் பயிற்சி மற்றும் ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு
எம்.டெக். படிப்பை முடிப்பவர்களுக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், அறிவியல் தொழில்நுட்பத் துறை, வேளாண் ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில், இந்திய மருத்துவக் கவுன்சில், மற்றும் பல்வேறு கல்லூரிகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
புவியியல் பாடத்தில் ஆன்-லைனில் தொலைதூரக் கல்வி முறையிலும் பல்வேறு படிப்புகளை சென்னை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள சால்ஸ்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்.எஸ்சி. புவியியல் தகவல் அறிவியல் மற்றும் சிஸ்டம்ஸ், பிரிட்டனின் நார்த்தாம்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்.எஸ்சி. சர்வதேச சுற்றுச்சூழல் மேலாண்மை என்ற பாடத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
மேலும், பிரிட்டன் ஸ்டாஃபோர்ட்ஷயர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்.எஸ்சி. நிலைத்த மற்றும் இயற்கை வள மேலாண்மை, எம்.எஸ்சி. நீடித்த வளர்ச்சி மற்றும் ஊரக சுற்றுச்சூழல் உள்ளிட்ட ஆன்-லைன் படிப்புகளையும் பல்கலைக்கழகம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தப் படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட துறைகளிலும், வெளிநாடுகளிலும் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என  அத்துறை பேராசிரியர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads