Pages

Sunday, 24 June 2012

திருப்பதி ஏழுமலையானுக்கு-குண்டு துளைக்காத கண்ணாடி

குண்டு துளைக்காத கண்ணாடி:

 பொருத்தி திருப்பதி கோவில் நகைகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு:திருப்பதி ஏழுமலையானுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைடூரிய நகைகள் உள்ளன. இதில் ஏராளமான நகைகள் மாயமாகி விட்டதாக பக்தர்கள் புகார்
 தெரிவித்தனர். இதையொட்டி குழு அமைக்கப்பட்டு ஏழுமலையானுக்கு சொந்தமான நகைகள் கணக்கிடப்பட்டது.
         இந்த நகைகள் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நகைகள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. திருப்பதி கோவிலுக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இவற்றை வைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.அருங்காட்சியகத்தில் குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்படுகிறது.
          இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி சுப்பிரமணியம் கோவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். திருப்பதி கோவிலில் இன்று பக்தர்கதிருப்பதி ஏழுமலையானுக்கு கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads