Pages

Monday, 25 June 2012

கலக்க வருகிறது 'ஐஸ் ஏஜ்

உலக அளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த அனிமேஷன் படம், அதிக அளவில் வசூலைக் குவித்த அனிமேஷன் பட வரிசைகளில் ஒன்று என்று சொன்னால் அது ‘ஐஸ் ஏஜ்’ படவரிசையாகத்தான் இருக்கும்.
கடந்த 2002-ல் ஐஸ் ஏஜ் பட வரிசையின் முதல் படமான 'ஐஸ் ஏஜ்' திரைக்கு
 வந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்து 'ஐஸ் ஏஜ் 2 - மெல்டிங் டவுன்' கடந்த 2006-ல் வெளிவந்தது. இப்படத்தை அடுத்து 'ஐஸ் ஏஜ் 3 - டான் ஆப் தி டைனோசிரஸ்' கடந்த 2009-ல் வெளிவந்தது.
இந்த மூன்று அனிமேஷன் படங்களும் வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி உலக அளவில் மெகா ஹிட்டானது. இந்த வரிசையில் தற்போது 'ஐஸ் ஏஜ் 4  - கான்டினென்டல் ட்ரிப்ட்' என்ற படம் திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் கதையாவது, ஐஸ் ஏஜ் காலம் இருந்த போது, கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்தன. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஏழு கண்டங்களாக நிலப்பரப்புக்கள் பிரிகின்றன.
அப்போது இப்படத்தில் வரும் ஐஸ் ஏஜ் காலத்து விலங்குகளான மேன்னி( யானை), டியாகோ (புலி), சிட் (சிறு கரடி) ஆகியவை கண்டங்கள் பிரியும் போது அவர்களது குடும்பத்தினர்களை விடுத்து தனிக்கண்டத்தில் மாட்டிக் கொள்கின்றன. இவைகள் மீண்டும் தங்களது குடும்பத்தினரோடு ஒன்று சேர்வது போல் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ் 'சாரா' எனும் பெண்புலி கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஜூலை 13-ம் தேதி அமெரிக்காவில் திரைக்கு வருகிறது.
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இத்திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 27-ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
  

No comments:

Post a Comment

ADVERTISE HERE.

space for ads